பெர்முடா முக்கோணத்தின் மர்மம் உடைந்தது.. கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்.. எல்லாத்துக்கும் காரணம் இதுதானா
வாஷிங்டன்: பெர்முடா என்ற சிறிய தீவுக்கு கீழே, பூமியின் ஆழத்தில் மிகப் பெரிய பாறை அமைப்பு ஒன்று இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாறை அமைப்பு இதுவரை பூமியின் வேறு எந்த பகுதியிலும் கண்டுபிடிக்கப்படாத வகையில் இருப்பதால், இது விஞ்ஞான உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பெர்முடா தீவு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது. பெர்முடா முக்கோணத்திற்கு செல்லும் வழியில் ஏராளமான கப்பல்கள், படகுகள் அல்லது விமானங்கள் மர்மமான முறையில் காணாமல் போனதாக பல செய்திகள் உண்டு.

அவர்களை மீட்க அனுப்பிய விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகின.. பெர்முடா முக்கோண மர்மம் உண்மையா அல்லது பொய்யா? அமெரிக்க போர் விமானங்களுக்கு என்ன ஆகின? பெர்முடா முக்கோணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? என்பதெல்லாம் இன்றுவரை மர்மமாகவே உள்ளன..
பெர்முடா முக்கோணம் மர்மம்
அதுமட்டுமல்ல, சுற்றிலும் ஆழமான கடல் இருந்தாலும், இந்த தீவு நீண்ட காலமாக கடலுக்கு மேலே தெரிந்துகொண்டே இருக்கிறது... இந்த தீவு ஏன் கடல் மட்டத்துக்கு மேலே நீண்ட காலமாக நிலைத்து இருக்கிறது? ஏன் இந்த தீவு மூழ்காமல் இருக்கிறது என்பதற்கு இதுவரை காரணம் தெரியவில்லை.. இதற்கான சரியான விளக்கத்தையும் யாருமே தரவில்லை..
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெரிய பாறைத் தளம் தான் அதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
சிறிய தீவுக்கு கீழே பெரிய கல்
இந்நிலையில், இந்த சிறிய தீவுக்கு கீழே, பூமியின் உள்ளே ஒரு மிகப்பெரிய கல் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கல் சாதாரண கல்லை போல இல்லையாம்.. மிகவும் பெரியது.. தடிமனானது... இந்த மாதிரி கல் பூமியின் வேறு எந்த இடத்திலும் இதுவரை காணப்படவில்லை.. இப்போது இந்த கல் பற்றிதான் பெரிய கல் தான் அந்த தீவு மேலே இருக்க உதவுகிறது என்று அறிவியலாளர்கள் தற்போது கூறியிருக்கிறார்கள்.
இந்த பெரிய கல் பூமியின் மேல்பகுதிக்கு கீழே இருக்கிறதாம்.. இது சுமார் 20 கிலோமீட்டர் தடிமனாக உள்ளது. அதாவது, நாம் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம் செல்லும் அளவுக்கு கீழே இந்த கல் பரந்து கிடக்கிறது.. இப்படியொரு பெரிய கல் ஒரே இடத்தில் இருப்பது மிகவும் அரிது என்கிறார்கள்..
பூமிக்குள் பெரிய கல்
இந்த கல்லை அறிவியலாளர்கள் நேரில் பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் பூமியில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்களை பயன்படுத்தினர். நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அதனால் உருவாகும் அதிர்வுகள் பூமிக்குள் செல்கின்றன. அந்த அதிர்வுகள் கல்லில் பட்டால் வேகமாகவும், மண்ணில் சென்றால் மெதுவாகவும் பயணம் செய்யுமாம்.. இதைப் பார்த்துதான், பூமிக்குள் பெரிய கல் இருப்பதை இப்போது அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், இந்த கண்டுபிடிப்பு, பெர்முடா முக்கோணம் பற்றிய கதைகளுடன் தொடர்பில்லை என்று அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.. விமானங்கள் காணாமல் போனது, கப்பல்கள் மூழ்கியது போன்ற கதைகளுக்கு இதுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லையாம்.. ஜஸ்ட் இது ஒரு அறிவியல் ஆய்வு மட்டுமே என்கிறார்கள்..
விஞ்ஞானிகள் உடைத்த உண்மை
இந்த பெரிய கல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம். அந்த காலத்தில் பூமிக்குள் நடந்த பெரிய மாற்றங்களால் இந்த கல் உருவானதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த கண்டுபிடிப்பு மூலம் பூமி எப்படி உருவானது? கண்டங்கள் எப்படி மாறின என்பது போன்ற பல கேள்விகளுக்கு எதிர்காலத்தில் பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது..
மொத்தத்தில், பெர்முடா தீவுக்கு கீழே ஒரு மிகப் பெரிய கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பயம் தரும் விஷயம் இல்லை.. ஆனால் பூமியை பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு முக்கியமான அறிவியல் முன்னேற்ற செய்தியாக இது பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications