செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள்? அதிசய பாறையை பார்த்து வியந்த நாசா விஞ்ஞானிகள்! தீவிரமடையும் ஆய்வுகள்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய பாறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படியொரு பாறையை விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் பார்த்தது கிடையாது. அந்த வகையில் இந்த பாறை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
செவ்வாய்க் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் இந்த பாறையை கண்டுபிடித்திருக்கிறது. ஜெசெரோ பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பாறைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், இந்த பாறை மட்டும் வித்தியாசமானதாக இருக்கிறது.

சுருக்கமாக சொல்வதெனில் இது ரொம்ப தூரத்திலிருந்து இந்த பகுதிக்கு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பாறை உண்மையில் எங்கு இருந்தது? எங்கிருந்து இங்கு வந்தது? எப்படி வந்தது? செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்த போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அரிக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறதா? அல்லது, நிலநடுக்கம் போன்ற செயல்பாடுகளால் இங்கு வந்ததா? விண்கல் மழை மூலம் வந்ததா? என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்தப் பாறை எவ்வாறு இங்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வது, செவ்வாய் கிரகத்தின் வரலாற்றின் அறியப்படாத அம்சங்களை வெளிப்படுத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விசித்திரமான பாறையை பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள மாஸ்ட்கேம்-இசட் எனப்படும் ஹை ரெசல்யூஷன் கொண்ட ஜூம் கேமராக்கள் முதலில் படமெடுத்தன. இந்த பாறை வரிக்குதிரையை போன்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த பாறையை ஆய்வு செய்தவன் மூலம் செவ்வாய் கிரகம் எப்படி இருந்தது? அது எப்படி உருவானது? உள்ளிட்ட கடந்த கால தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும். இந்த தகவல்கள் பூமியை முழுமையாக புரிந்துக்கொள்வதற்கும் முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த கல் ஏலியன் மூலமாக கூட இந்த பகுதிக்கு வந்திருக்கலாம் என சில யூகித்திருக்கின்றனர். யோசித்து பாருங்கள் 1000க்கும் அதிகமான பாறைகளை ஆய்வு செய்த ரோவருக்கு, இந்த பாறை எப்படி கண்ணில் பட்டது?
இந்த பாறைக்கும், அது இருக்கும் இடத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதபடி இருப்பது ஏன்? இந்த பாறைக்குள் என்ன இருக்கிறது? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பாறையை முழுமையாக ஆய்வு செய்தால்தால் இதை பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிய வரும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications