"ஆச்சரியம்.." இதுதான் பூமியின் தம்பியா.. அப்படியே பூமியின் புவி ஈர்ப்பு விசை.. வியக்கும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இது கிட்டத்தட்ட பூமியின் அளவில் இருப்பதை அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் நம்புவதில்லை. இதன் காரணமாகவே தொலைதூரத்தில் இருக்கும் பல்வேறு கிரகங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நாசா இதுபோன்ற தொலைதூர கிரகங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் நாசா தொலைதூரத்தில் இருக்கும் ஒரு முக்கியமான கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது.
புது கிரகம்: நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப், கிட்டத்தட்ட பூமியின் அளவில் இருக்கும் தொலைதூர கோளை கண்டுபிடித்துள்ளது. இந்த கோளுக்கு LTT 1445Ac என்று பெயரிடப்பட்டுள்ளது. எரிடானஸ் என்ற தொகுப்பில் சுமார் 22 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள மூன்று நட்சத்திர அமைப்பின் ஒரு பகுதியாக இந்த LTT 1445Ac இருக்கிறது.
ஒளி ஆண்டு என்றால், ஒளியின் வேகத்தில் நாம் இத்தனை ஆண்டுகள் பயணித்தால் மட்டுமே அந்த கிரகத்திற்குச் செல்ல முடியும். அதாவது ஒளியின் வேகத்தில் 22 ஆண்டுகள் சென்றால் மட்டுமே இந்த LTT 1445Ac கிரகத்திற்குச் செல்ல முடியும்.
கலக்கும் நாசா: இந்த LTT 1445Ac கிரகமாகக் கடந்த 2022இல் நாசாவின் டேஸ் என்ற சாட்டிலைட் முதலில் கண்டுபிடித்தது. இருப்பினும், அப்போது அந்த கோளின் தன்மை, எடை ஆகியவை துல்லியமாகத் தெரியவில்லை. 22 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்ததால் அதன் அளவை துல்லியமாகக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து ஹார்வர்ட் & ஸ்மித்சோனியன் மையத்தின் ஆய்வாளர் எமிலி பாஸ் கூறுகையில், "இத்தனை காலமாக அதன் அளவு என்ன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது ஹப்பிள் டெலஸ்கோப் உதவியுடன் அதைத் துல்லியமாக அளந்து இருக்கிறோம்" என்றார்.
தாய் நட்சத்திரம்: மேலும் நமது பிரபஞ்சத்தில் சில கிரகங்கள் அதன் தாய் நட்சத்திரத்தை முழுமையாகச் சுற்றி வராது. அதுபோல ஒரு கிரகமாக இந்த LTT 1445Ac இருந்துவிடுமோ என்று ஆய்வாளர்கள் முதலில் நினைத்தார்கள். ஆனால், ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்ததில் அது அப்படியொரு நட்சத்திரம் இல்லை என்றும் அது தனது தாய் கிரகத்தை முழுமையாகச் சுற்றி வந்ததையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஒரு கிரகம் அதன் தாய் நட்சத்திரத்தைச் சுற்றி வருவது ரொம்பவே முக்கியமான ஒன்று. அப்போது தான் அதில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு ஏற்படும். இந்த புதிய LTT 1445Ac கிரகம் கிட்டத்தட்ட பூமியின் அளவில், அதாவது பூமியுடன் ஒப்பிடும் போது இது 1.07 மடங்கு இருக்கிறது. மேலும், இந்த கிரகத்தில் இருக்கும் புவி ஈர்ப்பு சக்தியும் கூட பூமியில் இருக்கும் அளவுக்கே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பண்புகள்: இந்த பண்புகள் பூமியில் இருப்பதைப் போல இருந்தாலும் கூட அதன் கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பம் என்பது 500 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவே இருக்கிறது. இந்த வெப்பத்தில் பூமியில் வாழும் எந்தவொரு உயிரினமும் அங்கே இருக்க முடியாது. இந்த கிரகம் LTT 1445A என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறதாம். மேலும், இரண்டு கிரகங்களும் இதைச் சுற்றி வருகிறது. அவை இயங்குவதை வைத்துப் பார்க்கும் போது அது ஒரு மினி சோலார் சிஸ்டம் போல இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications