வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆறு ஓடுனது உண்மைதான் ஆனா இப்ப இல்ல.. செவ்வாய் கிரகத்தை கிரகித்த நாசா -ஆய்வில் கிடைத்த புதிய தகவல்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆறுகள் பாய்ந்து இருப்பதாக நாசா அனுப்பிய மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்ப்பிட்டரில் இருந்து வந்த தகவல் உறுதி செய்திருப்பதாக நாசா கூறியுள்ளது.

Recommended Video

    Mars Is Alive! NASA வெளியிட்ட புதிய தகவல்கள் | Oneindia Tamil

    சூரியக்குடும்பத்தில் நாம் வசிக்கும் பூமியை போலவே ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்புகளைக் கொண்ட கிரகமாக செவ்வாய் கிரகம் கருதப்படுகிறது இங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உலக நாடுகள் பலவும் நீண்ட காலமாக ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

    மனிதன் வாழ அத்தியாவசிய தேவையான ஆக்ஸிஜன் மற்றும் நீர் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுவருகிறது.

    டோங்கோ எரிமலை வெடிப்பு நூற்றுக்கணக்கான ஹிரோஷிமா குண்டு வெடிப்புக்கு சமமானது.. நாசா பகீர் தகவல் டோங்கோ எரிமலை வெடிப்பு நூற்றுக்கணக்கான ஹிரோஷிமா குண்டு வெடிப்புக்கு சமமானது.. நாசா பகீர் தகவல்

    செவ்வாய் கிரகம்

    செவ்வாய் கிரகம்

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படத்தின் மூலம் அங்கு ஏரி படுகை போன்ற அமைப்பு இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் மனிதன் செவ்வாய் கிரகத்தில் வசிப்பதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்தின் கீழ் அனுப்பிய மார்சிஸ் ராடார் கருவி மூலம் செவ்வாய் கிரகத்தில் ஏரி போன்ற அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் 20 கிமீ பரப்பளவில், 1.5 கிமீ ஆழத்தில் இந்த திரவப்படலம் பனி சூழ்ந்து இருப்பதாக இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    ஏரி போன்ற அமைப்பு

    ஏரி போன்ற அமைப்பு

    இந்த ஏரி போன்ற அமைப்பு சுமார் 3.6 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக காணப்படுவதாக அவர்கள் அமெரிக்க விஞ்ஞான பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருந்தனர். செவ்வாய் கிரகத்தில் அந்த மிகப்பெரிய ஏரி கண்டுபிடிக்கப்பட்டதற்கு விஞ்ஞானிகள் பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்த நிலையில் , அதே நேரத்தில் இன்னொரு விண்கலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்தி வந்தனர். செவ்வாய் கிரகத்தைல் நீர் இருப்பதை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகாக அங்கு மார்ஸ் ரீகனைசென்ஸ் எனப்படும் ஆர்ப்பிட்டர் அனுப்பப்பட்டது.

    மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்ப்பிட்டர்

    மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்ப்பிட்டர்

    அது அனுப்பியுள்ள தகவல் தான் தற்போது விஞ்ஞானிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் நினைத்ததை விட அதிக ஆண்டுகளுக்கு தண்ணீர் பாய்ந்து இருப்பது மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் அனுப்பிய தகவலின் படி உறுதியாகி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆவியாகி விட்டதாக பொதுவாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் நாஸாவின் மார்ஸ் ஆர்பிட்டரில் இருந்து வந்த தகவலின் படி 2 பில்லியன் முதல் 2.5 பில்லியன் ஆண்டுகள் வரை செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தின் பல பகுதிகளில் ஆறுகள் பாய்ந்ததற்கான தடயங்கள் இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் பள்ளத்தாக்குகளில் பாய்ந்த தண்ணீர் முழுவதும் ஆகிவிட்டதால் குளோரைடு உப்பு படிமங்களை உள்ளதையும் நாசா கண்டுபிடித்துள்ளது.

    ஆய்வுக்கான புதிய கதவுகள்

    ஆய்வுக்கான புதிய கதவுகள்

    செவ்வாய் கிரக ஆராய்ச்சி வரலாற்றில் இதுவும் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாகவும் கூடிய விரைவில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் முயற்சியும் நடைபெறும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் அது மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என கூறியுள்ள விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தைப் போன்று மாதிரி அமைப்புகளை பூமியில் உருவாக்கி அங்கு பயிற்சி பெற்ற பிறகு ஆய்வாளர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பலாம் எனவும் கூறியுள்ளனர்.

    English summary
    NASA says it has confirmed information from a Mars Reconnaissance Orbiter sent by NASA that rivers flowed on Mars about 2.5 billion years ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X