அட்ரா சக்க.. நாசாவின் மைல்கல்! 50000 கேலக்சிகளை படம் பிடித்த ஜேம்ஸ் வெப் -அதென்ன பாண்டோரா கிளஸ்டர்?

பூமியிலிருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து இருக்கும் கேலக்சி மண்டலமான பாண்டோரா கிளஸ்டரை முதல் முறையாக நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து உள்ளது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பூமியிலிருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு கேலக்சி மண்டலமான பாண்டோரா கிளஸ்டரை முதல் முறையாக நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி துல்லியமாக படம் பிடித்து உள்ளது. அதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கேலக்சிக்களின் ஒளிக்கீற்றுகள் பெறப்பட்டு இருப்பதாக நாசா கூறி உள்ளது.

எண்ணற்ற ஆச்சரியங்களையும் அபூர்வங்களையும் கொண்ட விண்வெளியிலிருந்து தினமும் ஏதாவது ஒரு தகவலோ, காட்சியோ வெளியாகி மக்களை வியப்படைய செய்து வருகிறது.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையிலான விண்வெளி புகைப்படங்களை படம் பிடித்து அனுப்பி வருகிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஜேம்ஸ் வெப் என்ற பெயரில் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியது. கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

பாண்டோரா கிளஸ்டர்

பாண்டோரா கிளஸ்டர்

இது தற்போது வெளியிட்டு உள்ள படம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்படைய வைத்து இருக்கிறது. விண்வெளி ஆய்வில் முதல் முறையாக Abell 2744 எனப்படும் பாண்டோரா கிளஸ்டரை இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து உள்ளது. பூமியிலிருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு கேலக்சி மண்டலம்தான் இந்த பாண்டோரா கிளஸ்டர்.

துல்லியமான படம்

துல்லியமான படம்

இந்த பாண்டோரா கிளஸ்டரை இதற்கு முன்பாக ஹப்பில் என்ற தொலைநோக்கி படம் பிடித்தது. ஆனால், அது அவ்வளவு துல்லியமாக இல்லை என்ற பேச்சு இருந்தது. இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் எடுத்து இருக்கும் படத்தில் பல்வேறு கேலக்சிக்கள் துல்லியமாக தெரிகின்றன. 3 வேறு வேறு கேலக்சிக்களை இணைத்து இந்த பாண்டோரா கிளஸ்டர் படம் வெளியிடப்பட்டு உள்ளது.

50 ஆயிரம் கேலக்சிக்கள்

50 ஆயிரம் கேலக்சிக்கள்

இதுகுறித்து விளக்கமளித்து இருக்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா, 50 ஆயிரத்துக்கும் அதிகமான கேலக்சிக்களின் ஒளிக்கீற்றுகள் இந்த படத்தில் பெறப்பட்டு இருப்பதாக கூறி உள்ளது. நமது பூமி இருப்பது சோலார் சிஸ்டம் எனப்படும் சூரிய குடும்பமாகும். இந்த சூரிய குடும்பம் உட்பட பல சூரிய குடும்பங்களை உள்ளடக்கிய கேலக்சியின் பெயர் மில்கி வே.

 30 மணி நேரம்

30 மணி நேரம்

இதுபோல் விண்வெளியில் கணக்கிட முடியாத அளவுக்கு கேலக்சிக்கள் உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் 50 ஆயிரம் கேலக்சிக்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. பாண்டோரா கேலக்சியில் உள்ள பகுதியை 30 மணி நேரமாக கவனித்து இந்த புகைப்படத்தை எடுத்து உள்ளதாக நாசா தெரிவித்து இருக்கிறது.

400 கோடி ஒளி ஆண்டுகள்

400 கோடி ஒளி ஆண்டுகள்

குறிப்பாக கிராவிடேசனல் லென்ஸ் எனப்படும் புவி ஈர்ப்பு லென்ஸ் தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளார்கள். பாண்டோரா கிளஸ்டர் எனப்படும் கேலக்சி மண்டலம் 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் கேலக்ஸிக்கள் இதன் மூலம் தெரியும் என்று கூறப்படுகிறது. இன்னும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு எத்தனை வியப்புகளை தரப்போகிறதோ தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+