பூமியை நோக்கி வரும் 2 சிறுகோள்கள்.. ஆபத்து இருக்கா? நாசா கொடுத்த எச்சரிக்கை!
வாஷிங்டன்: பூமிக்கு மிக நெருக்கமாக இரு மிகப்பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த இரு சிறுகோள்களால் பூமிக்கு எந்த பிரச்சனையுமில்லை என்று நாசா கூறியிருப்பதால், அந்த சிறுகோள்கள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் பூமிக்கு நெருக்கமாக செல்லும் விண்கற்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் பூமியை நோக்கி நெருக்கமாக இரு பெரிய ஆண்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த 2 சிறுகோள்களில் ஒன்று 2025 BY1 மற்றும் மற்றொன்றின் பெயர் 2025 பிஎஸ்2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ராய்டு 2025 BY1ஐ பொறுத்தவரை பஸ் சைஸ் எனப்படும் 33 அடிகளை கொண்டதாகும். பூமியில் இருந்து 26 லட்சத்து 30 ஆயிரம் கிமீ தூரத்தில் இருந்து பயணித்து கொண்டிருக்கிறது. இந்த சிறுகோள் மணிக்கு 26,789 கிமீ வேகத்தில் பயணிப்பதால், பூமிக்கு நெருக்கமாக நாளை இரவு 9.14 மணிக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பூமிக்கும் சிறுகோளுக்கும் இடையிலான தூரம் அதிகமாக தெரிந்தாலும், பிரபஞ்ச அடிப்படையில் சிறிய அளவு தான். அதேபோல் ஆஸ்ட்ராய்டு BS2-ஐ பொறுத்தவரை, 51 அடி கொண்டது. அதுமட்டுமல்லாமல் பூமியில் இருந்து 37 லட்சத்து 50 ஆயிரம் கிமீ தூரத்தில் இருந்து பயணித்து வரும் இந்த சிறுகோள், மணிக்கு 35,475 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் நாளை மதியம் 12.26 மணிக்கு பூமிக்கு நெருக்கமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சிறுகோள்களும் பூமிக்கு நெருக்கமாக வந்தாலும், எந்தவொரு சிக்கலும், பிரச்சனையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை ஆய்வு செய்து வரும் நாசாவின் முக்கிய அமைப்பு, டெலஸ்கோப் மற்றும் உயர்ரக ரேடர்கள் மூலமாக சிறுகோள்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதன் மூலமாக சிறுகோள்களின் பயணம் மற்றும் பாதையையும் நாசா துல்லியமாக கணித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே 2024 YF7 என்ர சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகில் பயணித்த போது, எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இதனால் சிறுகோள்களின் பயணம் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் கவனத்தை திருப்பியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications