விண்வெளியில் 280+ நாட்கள் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்! சம்பளம் இவ்வளவு குறைவா.. ஷாக் ஆவீங்க
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு இப்போது பூமி திரும்புகிறார்கள். அவர்கள் கடந்த 280+ நாட்களாக விண்வெளியில் உள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஊதியமாக எவ்வளவு கிடைக்கும்.. சிறப்பு ஊதியம் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ்ம் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 8 நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்றனர். ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த 8 நாள் பயணம் 9 மாதங்களாக ஆகிவிட்டது. இதனால் அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கித் தவிக்கும் சூழல் உருவானது.

எவ்வளவு சம்பளம்
அதேநேரம் அவர்கள் எங்கும் சிக்கவில்லை என்றும் சர்வதேச விண்வெளி மையத்தில் வேலையைத் தான் செய்து வருவதாக நாசா விளக்கமளித்து வந்தது. இப்போது பெரும் தாமதத்திற்குப் பிறகு அவர்களை அழைத்து வர நாசாவின் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுவிட்டது. சில நாட்களில் அது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை அழைத்துக் கொண்டு பூமிக்குத் திரும்பும் எனத் தெரிகிறது. இந்தச் சூழலில் இரு விண்வெளி வீரர்களுக்கும் இந்த விண்வெளி பயணத்திற்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது பேசுபொருள் ஆகியுள்ளது.
சிறப்பு ஊதியம் இல்லை
ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் கேடி கோல்மன் என்பவர் தனது விண்வெளி பயணத்தின் போது தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாய் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதன்படி நாசா வீரர் ஒருவர் விண்வெளியில் இருக்கும் காலகட்டத்திலும் ஓவர் டைம் சம்பளமோ அல்லது சிறப்புச் சம்பளமோ வழங்கப்படாது.. நாசா வீரர்கள் அனைவரும் பெடரல் ஊழியர்கள் தான்.
என்னதான் அவர்கள் விண்வெளியில் இருந்தாலும், அது அவர்கள் பூமியில் வழக்கமாக ஆபீஸ் போய் வேலை செய்வது போலவே கருதப்படும். அதாவது பெடரல் ஊழியர் அலுவல் ரீதியாக வேறு ஒரு ஊருக்குப் போனால் என்ன சலுகைகள் கிடைக்குமோ அது மட்டுமே கிடைக்கும். அவர்கள் தொடர்ந்து தங்கள் வழக்கமான ஊதியத்தைப் பெறுகிறார்கள். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்க ஆகும் செலவு மற்றும் அவர்களின் உணவு செலவுகளை நாசா பார்த்துக் கொள்ளும். இது மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும் சலுகை.
இழப்பீடு தொகை
மேலும், கூடுதலாகச் சிறு இழப்பீடு தொகையும் வழங்கப்படும். இது தினசரி உதவித் தொகை போலவே கருதப்படும். அதன்படி ஒரு நாளைக்கு வெறும் $4 (ரூ.347) வழங்கப்படும் என்கிறார் கோல்மன். அவர் 2010-11 காலகட்டத்தில் மொத்தம் 159 நாட்கள் விண்வெளியில் இருந்தார். அப்போது கோல்மனுக்கு மொத்தமாகவே சுமார் $636 (அதாவது ரூ.55,000 மட்டுமே) கூடுதல் ஊதியமாகக் கிடைத்துள்ளது.
அதன்படி பார்த்தோம் என்றால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இப்போது மொத்தம் 287 நாட்களுக்கு மேல் விண்வெளியில் இருக்கிறார்கள். அதன்படி அவர்களுக்குக் கூடுதல் சம்பளமாக தலா $1,148 (சுமார் ரூ.1 லட்சம்) மட்டுமே கிடைக்கும். இது அமெரிக்காவில் மிக மிகக் குறைந்த தொகையாகவே கருதப்படுகிறது.
அரசு ஊதியம் எவ்வளவு
சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த காலகட்டத்தில் சுனிதா வில்லியம்ஸுக்கு மொத்தம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அமெரிக்க பெடரல் ஊழியர்களின் ஊதியத்தில் GS-15 பிரிவில் உள்ளனர். அமெரிக்க பெடரல் ஊழியர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச சம்பள ரேங்கில் இவர்கள் உள்ளனர்.
GS-15 பெடரல் ஊழியர்களுக்கு ஒரு ஆண்டிற்கு அடிப்படை சம்பளமாக $125,133 - $162,672 (சுமார் ரூ.1.08 கோடி - ரூ.1.41 கோடி) வரை கிடைக்கும். அதன்படி சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும் 9 மாதங்கள் விண்வெளி மையத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு $93,850 - $122,004 (சுமார் ரூ.81 லட்சம் - ரூ.1.05 கோடி) வரை வழக்கமான சம்பளம் கிடைக்கும்
மொத்த வருவாய் எவ்வளவு
இது தவிர அந்த சிறு சிறப்புத் தொகை $1,148 (சுமார் ரூ.1 லட்சம்) சேரும் என்பதால் இந்த விண்வெளி பயணத்திற்கு அவர்களுக்கு $94,998 - $123,152 (சுமார் ரூ.82 லட்சம் - ரூ.1.06 கோடி) சம்பளமாகக் கிடைக்கும். இது நமக்குப் பெரிய தொகை போலத் தோன்றினாலும் அமெரிக்காவில் தனியார் துறையில் வேலை செய்யும் பல ஊழியர்களை ஒப்பிடும் போது இது குறைவுதான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications