"எப்புட்றா.." 83 வயதில் தந்தையான பிரபலம்.. அதுவும் 29 வயது பெண்ணுடன்.! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
வாஷிங்டன்: பிரபல நடிகரும் ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இப்போது தனது 83 வயதில் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். இதை நெட்டிசன்கள் பலரும் வரவேற்றாலும் சிலர் விமர்சித்தே வருகின்றனர். அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
உலகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது வாழ்க்கை முறை வேகமாக மாறி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நமது உடலிலும் பல வித மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இது ஒரு புறம் இருக்க இந்த பரபர வாழ்க்கையில் பலரும் திருமணம், குழந்தைகள் ஆகியவற்றை தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகின்றனர்.

மருத்துவ ரீதியான மாற்றம்: குறிப்பாக, குழந்தைகள் பிறக்கும் வயது என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் வெளிநாடுகளில் 30, 35 வயதுக்கு மேல் தான் பலரும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர். ஆனால், அந்த வயதில் அவர்களுக்கு மருத்துவ ரீதியாகப் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் குறைபாடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்குச் சிகிச்சை தரவே பல கருத்தரிப்பு மையங்களும் வந்துவிட்டன. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபலம் தனது 83 வயதில் தந்தையாகியுள்ளார். அவருக்குப் பலரும் வாழ்த்து சொன்னாலும், நெட்டிசன்கள் பலராலும் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. யார் அவர்.. என்னாச்சு என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அல் பசினோ: ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோ தான் இப்போது தந்தையாகியுள்ளார். இது இவருக்குப் பிறக்கப் போகும் 4ஆவது குழந்தையாகும்.. 83 வயதான பசினோவும் 29 வயதான அல்பல்லா என்ற பெண்ணும் கடந்தாண்டு முதல் காதலித்து வருகின்றனர். இந்தத் தம்பதிக்குத் தான் இப்போது குழந்தை பிறக்க உள்ளது. இந்தத் தகவலை நடிகர் தரப்பும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், அதைத் தாண்டி வேறு எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்ற பசினோ, "ஸ்கார்ஃபேஸ்", "தி காட்பாதர்", "தி ஐரிஷ்மேன்", "சென்ட் ஆஃப் எ வுமன்" உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒன்ஸ் அப்பான் தி டைம் இன் ஹாலிவுட் படத்திலும் கூட இவர் நடித்துள்ளார்.

விமர்சனம் ஏன்: அவருக்கு ஏற்கனவே ஆக்டிங் பயிற்சியாளர் ஜான் டாரன்ட் உடன் ஜூலி மேரி என்ற மகள் உள்ளார். இதில் ஜூலி மேரிக்கு வயது 33 ஆகும். மகளை விட இளைய பெண்ணை டேட் செய்து வருவதையே பலரும் விமர்சித்து வரும் நிலையில், இப்போது இவர்களுக்குக் குழந்தையும் பிறக்க உள்ளது. சிலர் அது அவரது தனிப்பட்ட உரிமை என்று சொன்னாலும் கூட சிலர் அவரை சாடியே வருகின்றனர். அதேபோல நடிகை பெவர்லி டி'ஏஞ்சலோவுடன் இரட்டையர்களான அன்டன் ஜேம்ஸ் மற்றும் ஒலிவியா ஆகியோர் உள்ளனர்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், மற்றொரு ஹாலிவுட் பிரபலமான ஆஸ்கர் விருது பெற்ற நடிகரான ராபர்ட் டி நீரோவுக்கு 79 வயதில் ஏழாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications