"கல் உப்பு சைஸ் கூட இல்ல.." ஆனா வைரத்திற்கு நிகரான விலை.. சாதாரண பிளாஸ்டிக் பேக்கிற்கு இந்த ரேட் ஏன்
வாஷிங்டன்: ஒரு கல் உப்பைக் காட்டிலும் சிறிய பேக் ஒன்று 51 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி இணைய உலகையே அதிர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
ஃபேஷன் உலகில் எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்லவே முடியாது. அருமையான டிசைன் உள்ள விஷயங்கள் ஒதுக்கி தள்ளப்படலாம். யாருமே எதிர்பாராத டிசைன்கள் ஹிட் அடிக்கும்.
இப்படி யாரும் எதிர்பார்க்காத பல ஷாக் அதிர்ச்சி சம்பவங்களைக் கொண்டதாகவே பேஷன் உலகம் இருந்து வருகிறது. அப்படி யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இது நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

குட்டி பேக்: மைக்ரோஸ்கோபிக் பேக் ஒன்று ஆன்லைன் ஏலத்தில் பெரும் தொகையைப் பெற்றுள்ளது. இது ஃபேஷன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது புரூக்ளினின் புகழ்பெற்ற கலைக் குழுவான MSCHF உருவாக்கிய இந்த சிறு பைக் ஆன்லைனில் ஏலம் விடப்பட்ட நிலையில், அது யாருமே எதிர்பார்க்காத வகையில் 51 லட்சம் ரூபாய் ஏலம் போனது.
இந்த பேக்கின் நடுவில் "LV" லோகோவையும் வைத்துள்ளனர். மேலும், சில வேலைப்பாடுகளையும் இந்த பேக் கொண்டுள்ளது. ஆனால், இங்கே தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதாவது இந்த பேக் வெறும் 657 x 222 x 700 மைக்ரோமீட்டர் அளவு கொண்டதாக இருக்கிறது. அதாவது நம்ம ஊர் கல் உப்பைக் காட்டிலும் சிறியது. இதனால் அந்த பேக்கில் என்ன டிசைன் இருக்கிறது என்பதை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது.
டெலஸ்கோப்: MSCHF குழு உருவாக்கியுள்ள இந்த பேக் ரொம்பவே நுணுக்கமானது. எந்தளவுக்கு என்றால் இதை வெறும் கண்களால் பார்க்கக் கூட முடியாது. அந்தளவுக்குச் சின்னது. அப்போ இந்த பேக்கில் இருக்கும் வேலைப்பாடுகளை எப்படி ரசிப்பது எனக் கேட்கிறீர்களா.. அதுக்குத் தான் அவர்கள் கூடவே ஒரு டெலஸ்கோப்பை தருகிறார்கள். அந்த டெலஸ்கோப்பை வைத்து நாம் பேக்கின் அழகிய வேலைப்பாடுகளை ரசிக்கலாமாம்.
இந்த பேக்கிற்கான ஏலம் இணையம் மூலம் நடத்தப்பட்டது. கடந்த மாதம் இதற்கான ஏலம் ஆரம்பமானது. தொடக்க விலையாக $15,000, அதாவது 12.31 லட்ச ரூபாய் வைக்கப்பட்டது. உலகில் இந்தளவுக்குச் சிறிய பேக் என எதுவும் இல்லை என்பதால் இயல்பாகவே இந்த பேக்கின் மீது பலரும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கின் விலை மெல்ல உயர்ந்து இறுதியில் சுமார் 51 லட்ச ரூபாய்க்கு அது விற்றுள்ளது

நமது கைகளில் இருக்கும் டிசைனர் பேக்குகளின் சைஸ் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதை உணர்த்தும் வகையிலேயே MSCHF இந்த முயற்சியை எடுத்துள்ளது. இது பேக் மினியேட்சரின் உச்சமாகக் கருதப்படுகிறது. இது ஃபேஷன் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது என்றால் மிகையில்லை.
நெட்டிசன்கள் கதறல்: இந்த குட்டி பேக் தொடர்பான தகவல்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆன நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்குப் பல வித கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன்கள் பலர் எப்படி இவ்வளவு சிறிதாக இந்தளவுக்கு அழகிய பேக்கை உருவாக்கினர் என வியந்து வருகின்றனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் பார்க்கவே முடியாத இந்த பேக்கை வைத்து என்ன தான் எடுத்துச் செல்ல முடியும். இதுக்கு இவ்வளவு ரேட்டா என நொந்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications