"மகாபிரபு.. இங்கேயும் வந்துடீங்களா!" ட்விட்டருக்கு பின் எலான் மஸ்க் வைக்கும் குறி! நெட்டிசன்கள் கலகல
ட்விட்டரை தொடர்ந்து எலான் மஸ்க், வங்கி ஒன்றை வாங்குகிறார்.
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தில் இப்போது சம்பவம் செய்து கொண்டிருக்கும் எலான் மஸ்க் அடுத்து இப்போது எஸ்விபி பக்கம் வந்துள்ளார். எஸ்விபி வங்கி இப்போது திவாலாகும் நிலையில், எலான் மஸ்க் இது குறித்துக் கூறியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.. உலகம் முழுக்க நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவே இவர் இருந்து வருகிறார். இணையத்தில் சர்ச்சை கருத்துகளைத் தெரிவிப்பதையும் இவர் வழக்கமாகவே வைத்துள்ளார்.
51 வயதான எலான் மக்ஸ் கைவசம் 5,6 நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிறது. இதனிடையே இப்போது புதிதாக ஒரு நிறுவனத்தை வாங்க ரெடியாகிவிட்டார் போல. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

எலான் மஸ்க்
இணையத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளைச் சொல்லி வரும் 51 வயதான எலான் மஸ்க், வெற்றிகரமான தொழிலதிபராகவே இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மின்சார கார்கள் என்றாலே அது மெதுவாகத் தான் இருக்கும்.. அதை ஓட்டுவதே போரடிக்கும் என்ற மனநிலையே இருந்தது. அதை மாற்றி அதிரடியான டெஸ்லா கார்களை கொண்டு வந்து அனைவரையும் வியக்க வைத்தார். இன்றும் கூட மின்சார கார் சந்தையில் உலகளவில் டெஸ்லா டாப் இடத்தில் இருக்கிறது. ஒரு வகையில் இன்று மின்சார கார் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அடித்தளமிட்டதே அவர் தான் என்று சொல்லலாம்.

வெற்றிகரமான பிஸ்னஸ்
அடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதை அரசு மட்டும் செய்ய முடியும் என்பதை உடைத்து, தனியார் நிறுவனத்தாலும் முடியும் என்பதைச் செய்து காட்டினார். இவரது முறையைப் பின்பற்றுவதால் செலவும் கணிசமாகக் குறைகிறது. இப்போது நாசாவே இவரது ராக்கெட்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க் கிரகத்திற்கு மக்களைக் குடியேற்றுவேன் என்று கூறியுள்ள எலான் மஸ்க், அதற்கான நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். இது தவிர மனித மூளையில் சிப்பை வைக்கும் நியூராலிங்க் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ட்விட்டர் நிறுவனம்
இது தவிர உலகை இப்போது ஆட்டுவிக்கும் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ கம்பெனியின் இணை நிறுவனரும் இவர் தான். இப்படி மற்ற பிஸ்னஸ்களில் அதிரடி காட்டி வந்த எலான் மஸ்க், கடந்த கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று தாடி வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு, அவர் ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கினார். இதனால் அவர் ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், போர்ட் உறுப்பினர் ஆக அவர் மறுத்தார்.

அதிரடி
சில நாட்களிலேயே ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப் போவதாகச் சொல்லி அதிர்ச்சி தந்தார். அவர் முதலில் இதை ட்விட்டரிலேயே விளையாட்டாக அறிவித்தார். இதற்கு முன்பே, நெட்டிசன்கள் பலர் கேட்ட போதும் ட்விட்டரை வாங்கத் தயார் என்றே கூறியிருந்தார். 44 மில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். இருப்பினும், ட்விட்டரிக்கு எலான் மஸ்க் தர முன்வந்துள்ள தொகை அதிகம் என்று விமர்சனங்கள் எழுந்தன,. இதனாலோ என்னவோ திடீரென பின்வாங்க முயன்றார். இருப்பினும், நீதிமன்றம் சென்ற முதலீட்டாளர்கள் எலான் மஸ்கை சொன்ன தொகைக்கு ட்விட்டரை வாங்க வைத்துவிட்டனர்.

ட்விட்டர்
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் உள்ளே எடுக்கும் பல நடவடிக்கைகள் சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது. ஆட் குறைப்பு, ப்ளூ டிக் விவகாரத்தில் அவரது முடிவுகள் சர்ச்சையானது. இன்னுமே ட்விட்டர் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று சொல்லலாம். ஒரு நிறுவனம் மீது பயனாளர்கள் கோபமாக இருக்கலாம்.. ஆனால் ஊழியர்களே கோபமாக இருப்பது என்றால் அது ட்விட்டரில் தான். இது குறித்து அவர்கள் ட்விட்டரிலேயே விமர்சித்து வருகின்றனர். ட்விட்டரின் கதியே இப்படி இருக்கும் நிலையில், அவர் இப்போது மற்றொரு புது துறையில் நுழையப் போவதாக அறிவித்துள்ளார்.

முக்கிய வங்கி
அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் வங்கி எஸ்விபி.. இந்த வங்கியில் பணம் வைத்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றதால் இது இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது. முதிய டெபாசிட்களை இந்த வங்கியால் பெற முடியாமல் போனது. இதையடுத்து புது பங்கு பங்குகளை வெளியிட்டும், பத்திரங்களை நஷ்டத்திற்கும் விற்றும் நிலைமை சமாளிக்க முயன்றது. இது வங்கியை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியது. இதனால் வங்கியின் பங்குகளின் மதிப்பு 60% வரை சரிந்தன. இதையடுத்து வங்கிகளை மூட அந்நாட்டு கண்காணிப்பு அமைப்பு உத்தரவிட்டது.

மஸ்க் சொன்ன பதில்
கலிபோர்னியாவில் 1983-ல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி பேங்க், அமெரிக்காவின் 16ஆவது மிகப் பெரிய வங்கியாகும். இந்த எஸ்விபி முடங்கியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. சிலிக்கான் வேலி பேங்க் இப்போது திவாலான நிலையில் ரேசர் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தின் சிஇஓ மின்-லியாங் டான், "இப்போது டிவிட்டர் நிறுவனம் சிலிக்கான் வேலி பேங்க்-ஐ வாங்கி டிஜிட்டல் வங்கியாக மாற்ற வேண்டும்" என்று பதிவிட்டார். அதற்கு சில நொடிகளிலேயே பதிலளித்த எலான் மஸ்க், "இந்த ஐடியாவுக்கு நான் தயார்" என்று பதிலளித்துள்ளார்.

நக்கல்
இது விளையாட்டாகத் தோன்றினாலும் கூட, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் இதேபோலத் தான் ஆரம்பித்தது என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வேறு யாராவது வாங்கினாலோ... அல்லது மற்றொரு வங்கியுடன் இணைந்தாலோ மட்டுமே எஸ்விபி வங்கியால் தாக்குப்பிடிக்க முடியும். ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தில் இப்போது சம்பவம் செய்து கொண்டிருக்கும் எலான் மஸ்க் அடுத்து இப்போது எஸ்விபி பக்கம் வந்துள்ளதை நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.

மஸ்க் சொன்ன பதில்
கலிபோர்னியாவில் 1983-ல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி பேங்க், அமெரிக்காவின் 16ஆவது மிக பெரிய வங்கியாகும். இந்த எஸ்விபி முடங்கியது பெரும் பரபரப்பை கிளப்பியது. சிலிக்கான் வேலி பேங்க் இப்போது திவாலான நிலையில் ரேசர் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தின் சிஇஓ மின்-லியாங் டான், "இற்போது டிவிட்டர் நிறுவனம் சிலிக்கான் வேலி பேங்க்-ஐ வாங்கி டிஜிட்டல் வங்கியாக மாற்ற வேண்டும்" என்று பதிவிட்டார். அதற்கு சில நொடிகளிலேயே பதிலளித்த எலான் மஸ்க், "இந்த ஐடியாவுக்கு நான் தயார்" என்று பதிலளித்துள்ளார்.

நக்கல்
இது விளையாட்டாக தோன்றினாலும் கூட, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் இதேபோல தான் ஆரம்பித்தது என்பதால் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வேறு யாராவது வாங்கினாலோ... அல்லது மற்றொரு வங்கியுடன் இணைந்தோலோ மட்டுமே எஸ்விபி வங்கியால் தாக்குப்பிடிக்க முடியும். ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தில் இப்போது சம்பவம் செய்து கொண்டிருக்கும் எலான் மஸ்க் அடுத்து இப்போது எஸ்விபி பக்கம் வந்துள்ளதை நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications