விண்டோஸ் முடக்கம்.. ஒரே ஒரு கேள்வி.. தண்ணீர் எடுத்து குடித்து.. திக்கி திணறிய க்ரவுட் ஸ்டிரைக் சிஇஓ!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: க்ரவுட் ஸ்டிரைக்கின் ஒரு சின்ன தவறான அப்டேட் காரணமாக வெள்ளிக்கிழமை உலகெங்கும் உள்ள மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கின. இதனால் உலகெங்கும் விமானச் சேவை தொடங்கி பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே இந்த செயலிழப்பு குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல் க்ரவுட் ஸ்டிரைக் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் திணறிப் போனார். இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை உலகெங்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் அடுத்தடுத்து முடங்கின. இதனால் உலகெங்கும் பல சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே க்ரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் பிரபல செய்தி வாய்க்கால் ஒன்றுக்கு இது தொடர்பாகப் பேட்டியளித்தார்.

microsoft windows

அப்போது நெறியாளர் கேட்ட ஒரே ஒரு எளிமையான கேள்விக்கு அவர் பதிலளிக்கத் திக்கித் திணறிப் போனார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஒரே ஒரு கேள்வி: அமெரிக்காவில் உள்ள என்பிசி டுடே டிவிக்கு இந்த விண்டோஸ் செயலிழப்பு தொடர்பாக கார்ஜ் கர்ட்ஸ் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர், இவ்வளவு பெரிய தோல்வியை எப்படி ஒரே ஒரு அப்டேட் ஏற்படுத்தும் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு உடனடியாக பதில் அளிக்காத குர்ட்ஸ் சில நிமிடங்கள் வரை பேசாமல் இருந்தார். அப்போது அவர் பதற்றமடைந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. மேலும், தெளிவான விளக்கத்தைத் தராமல் சும்மா 2 வரியில் ஏதோ சொல்லி இருக்கிறார்.

"அப்டேட் வந்தாச்சு.."முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்! சரி செய்வது எப்படி! சிஇஓ அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சிக்கல் என்ன:
மைக்ரோசாப்ட் விண்டோஸுக்கு சைபர் செக்யூரிட்டி வழங்கும் க்ரவுட் ஸ்டிரைக் கடந்த வெள்ளிக்கிழமை அப்டேட்டை வழங்கியது. இந்த அப்டேட்டை செய்த ஏகப்பட்ட கணினிகள் வரிசையாக முடங்கின. இதனால் உலகெங்கும் பல்வேறு சேவைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

பல இடங்களில் வங்கி சேவை முடங்கின. விமானச் சேவைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல ஐடி நிறுவனங்களும் கூட தங்கள் ஊழியர்களை லாகின் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

கேள்வி: அந்த நேர்காணலின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர், "ஒரே ஒரு அப்டேட் காரணமாக விமானப் பயணம், கிரெடிட் கார்டு கட்டண முறைகள், வங்கிகள், ஒளிபரப்பு, எமர்ஜென்சி சேவை ன அனைத்தும் முடங்கி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு அப்டேட் தான் என்கிறீர்கள் நீங்கள்.. இவ்வளவு முக்கியமான அப்டேட் என்றால் கூடுதல் பாதுகாப்பு அல்லது தவறை சமாளிக்க எந்தவொரு பேக்அப் பிளானும் இல்லாமல் போனது ஏன்.. ஒரே ஒரு அப்டேட் எப்படி இவ்வளவு பெரிய மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்" என்று கேள்வி எழுப்பினார்.

உரிய விளக்கம் இல்லை:
இந்த கேள்வியைக் கேட்ட உடன் க்ரவுட் ஸ்டிரைக் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் பதற்றமடைந்தார். அருகே இருந்த கிளாஸை எடுத்து தண்ணீர் குடித்தார். அதன் பிறகு ஒருவாறு சமாளித்த அவர் சைபர் செக்யூரிட்டி அப்டேட் என்பது முக்கியமானது.. அதில் ஏற்பட்ட சிறு பிழை காரணமாகவே இதுபோல ஏற்பட்டுவிட்டது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்று மட்டும் பதிலளித்தார்.

இதற்கிடையில், க்ரவுட் ஸ்டிரைக் அப்டேட் போதிய தர சரிபார்ப்பிற்கு உட்படுத்தப்படவில்லை என்றும் இதுவே பிரச்சினைக்குக் காரணம் என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் கோடிங்களை சரிபார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.. அல்லது அவர்கள் சரிபார்த்த கோடிங்கில் இருந்து இது தப்பி இருக்கிறது என்று சொல்லலாம். இது க்ரவுட் ஸ்டிரைக் மீதான தவறுதான்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+