"தண்ணீரில் கை வைத்த மறுநொடி!" அப்படியே பாய்ந்து வந்து கையை கவ்விய சுறா.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ
வாஷிங்டன்: மீன்பிடிக்க சென்ற ஒருவர் கையை கழுவும் போது திடீரென சுறா ஒன்று பாய்ந்து கையை கடித்து தண்ணீருக்குள் இழுத்து செல்லும் ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மீன் பிடிப்பதை பொழுது போக்காகவே செய்வார்கள். குடும்பமாக வீக் எண்டில் வெளியே சென்று மீன் பிடிப்பதை பொழுதுபோக்காகவே செய்வார்கள்.

அங்கே பொதுவாக தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்கு மீன் பிடிப்பதை கற்று தருவார்கள். அந்தளவுக்கு அங்கே அது கலாசாரம் சார்ந்ததாகவும் இருக்கும். இதற்கிடையே அப்படி ஜாலியாக மீன் பிடிக்கச் சென்ற ஒருவருக்கு அங்கே ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
ஷாக் சம்பவம்: புளோரிடாவின் எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் மீன்பிடிக்க சென்ற ஒருவரின் கையை சுறா கடித்து தண்ணீரில் இழுத்துச் சென்ற ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாக டிரெண்டாகி வருகிறது. அந்த நபர் தனது கைகளை கழுவ படகின் ஓரத்தில் சாய்ந்தபோது நீரில் இருந்து பாய்ந்து வந்த சுறா அவரது கையை கடித்துள்ளது. மேலும், அப்படியே அவரை அது உள்ளே இழுத்து சென்றுவிட்டது.
சுறா அவரை வலிமையாக இருந்ததால், நீருக்குள் இழுத்துவிட்டது. இருப்பினும், அருகே படகில் இருந்த மற்றொருவரும் உதவ சில நொடிகளில் அவர் பதறியடித்துக் கொண்டு மீண்டும் படகில் ஏறிவிட்டார். இது வீடியோ தான் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. இந்த சம்பவத்தை படகில் இருந்த மைக்கேல் என்ற நபர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவர் இது தனது பயங்கரமான நாட்களில் ஒன்று என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா: அவர் மேலும் கூறுகையில், "கைகளை கழுவ நீரில் கைவிட்ட மறுநொடி எனது நண்பரின் கையை அப்படியே சுறா வந்து கவ்விவிட்டது. தண்ணீரில் ரத்தம் எதுவும் இல்லை. இருப்பினும், சுறா எப்படி தூண்டப்பட்டது என தெரியவில்லை. எவர்க்லேட்ஸில் சுறா தாக்குதல் அடிக்கடி நடக்கும். எனவே அங்கே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதை நீங்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் நீங்களும் உங்கள் கையை இழக்க நேரிடும்" என பதிவிட்டுள்ளார்
சுறாவின் இந்த எதிர்பாராத தாக்குதலில் அந்த நபர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் விமானம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார். அவரது காயம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஏன் இப்படி தாக்குதல் நடக்கிறது: பொதுவாக கடலில் ரத்தம் இருந்தால் தான் அதை மொப்பம் பிடித்துக் கொண்டு சுறாக்கள் வந்துவிடும். அதுபோன்ற நேரங்களில் தான் சுறாக்கள் மனிதர்களை தாக்கும். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் ரத்தம் எதுவும் நீரில் இல்லாத சூழலிலும் திடீரென இதுபோல தாக்கியுள்ளது. சுறா அவரை கடலில் இழுத்த போதிலும், அதன் பிறகு தாக்கவில்லை. தொடர்ந்து தாக்கியிருந்தால் அவர் உயிரே கூட இழந்திருப்பார்.












Click it and Unblock the Notifications