என்னங்க சொல்றீங்க.. பீர் குடித்தால் சர்க்கரை நோய் வராதாம்.. உடல் எடையும் அதிகரிக்காதாம்! புதிய ஆய்வு
வாஷிங்டன்: பீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளே ஏற்படுவதாகப் புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது என்ன நன்மைகள் எனப் பார்க்கலாம்.!
பீர் உள்ளிட்ட மது வகைகளைக் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் சாதகம் மற்றும் பாதக அம்சங்களைக் கண்டறிய உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் பீர் குடிப்பதினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக போர்சுகள் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்துக் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.

பீர்
பீர் பிரியரா நீங்கள். பீரினால் என்ன எல்லாம் நன்மைகள் ஏற்படுகிறது தெரியுமா? இது குறித்துக் கண்டுபிடிக்கத் தான் போர்ச்சுகல் நாட்டில் புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் பீர் குடிப்பது குடலுக்கு நன்மை அளிப்பதாகத் தெரிய வந்துள்ளது. அவ்வளவு ஏன் சில குறிப்பிட்ட நோய்களைத் தடுக்கும் திறனை பீர் கொண்டு இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உதவும்
இது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், "பீர் குடிப்பது என்பது குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளின் கலவையை மேம்படுத்த உதவுகிறது. இது உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற நோய்களைத் தடுக்கும் வாய்ப்பு உள்ளது. எடை மற்றும் கொழுப்பு அதிகரிக்காமல், குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்க பீர் பெரியளவில் உதவுகிறது.

எடை அதிகரிக்காது
பீர் குடிப்பது குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்ற "கார்டியோமெடபாலிக் பயோமார்க்ஸர்களின் அளவில் தலையிடாது. எனவே, உடலில் இருக்கும் கொழுப்பு அதிகரிக்காது. அதேநேரம் குடலில் இருக்கும் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இது சர்க்கரை நோய் வருவதைக் குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தடுக்கும்" என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எப்படி
ஏற்கனவே, ரெட் ஒயின் குடிப்பதால் இதுபோன்ற நன்மைகள் கிடைப்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் இப்போது பீர் குடிப்பதும் நீரிழிவு நோயைத் தடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. பீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் உட்பட பல பொருட்கள் ஊட்டச்சத்தை வழங்கும். பீரில் மெக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், குரோமியம் மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறையும்
இது குறித்து மருத்துவர் கூறுகையில், "சிறிய அளவில் மது அருந்துவது (பெண்களுக்கு ஒரு கிளாஸ், ஆண்களுக்கு இரண்டு கிளாஸ்) இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் ஆரம்பக்கால மரணம் ஆகியவை குறைக்கலாம். மன அழுத்தத்தைக் குறைத்தல், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகளைக் குறைத்தல், கெட்ட கொழுப்பைக் குறைத்தல் மற்றும் வைட்டமின் பி போன்றவற்றுக்கும் பீர் உதவும்

ஆபத்து
அதேநேரம் இது எப்போதாவது குறைந்த அளவில் பீர் குடிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் அதாவது மாதம் ஒரு முறை அல்லது இரு முறை பீர் குடிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தினசரி பீர் குடித்து, மதுவுக்கு அடிமையாக உள்ளவர்களுக்கு இது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும்" என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications