ஒன்றாக மது குடிக்கும் கணவன் மனைவி மகிழ்ச்சியாக உள்ளனர்.. புது ஆய்வு முடிவு! ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு
வாஷிங்டன்: ஒன்றாக மதுக் குடிக்கும் தம்பதிகள் மற்றவர்களை விடச் சந்தோஷமாகவும் நீண்ட நாட்களும் வாழ்வதாகச் சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே மது குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமான போக்கு இல்லை. மது குடிப்பதால் நமது உடலுக்குப் பல மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். மது குடிப்பதால் மனித உடலில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

இருப்பினும், சமீபத்தில் கணவன் மனைவி அல்லது பாட்னர்கள் இணைந்து மது குடிப்பது அவர்களுக்கு பாசிட்டிவ் விளைவுகளை ஏற்படுத்துவதாக ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மகிழ்ச்சி: ஒன்றாக மதுக் குடிக்கும் தம்பதிகள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி அல்லது பாட்னர்கள் இணைந்து மது குடிப்பதை அவர்கள் தி டிரிங்கிங் பார்டனர்ஷிப் (the drinking partnership) என்று அழைக்கிறார்கள். இது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
ஆய்வு முடிவுகள்: இந்த ஆய்வு மது அருந்துவதை எந்த விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தம்பதிகளுக்கு இடையே ஒரே மாதிரியான பழக்கங்கள் இருந்தால் அது உறவில் எந்தளவுக்கு பாசிட்டிவ் பலனைத் தருகிறது என்பதை மட்டுமே இது எடுத்துக்காட்டுகிறது. ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களையும் ஹாபிக்களையும் வைத்து இருந்தால் அது அந்த உறவை வலுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 4,500 பேரிடம் கருத்துக் கேட்டுள்ளனர். அதில் தான் தம்பதிகள் ஜோடியாக மது குடிப்பது நீண்டகால நன்மைகளை ஏற்படுத்துவது தெரிய வருகிறது. இந்த ஆய்வில், ஒன்றாக மது அருந்தும் பழக்கம் உள்ள தம்பதிகள், மது அருந்தாத தம்பதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர்.
ஜோடியாக மது குடிப்பது: அதேநேரம் இருவரில் ஒருவர் மட்டுமே மதுக் குடிக்கும் நபராக இருந்தால் அது வாழ்நாளை அதிகரிக்கவில்லை. அதாவது இருவரும் மதுக் குடிக்கும் நபராகவும் அவர்கள் இணைந்து மதுக் குடிக்கும் பழக்கத்தை வைத்து இருந்தால் மட்டுமே வாழ்நாள் அதிகரிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
"சூரிய ஒளியை சூரியனுக்கே திருப்பி அனுப்ப போறேன்!" பூமியை குளிர்விக்க அமெரிக்க ஆய்வாளரின் பலே திட்டம்
இது குறித்து மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் கிரா பிர்டிட் கூறுகையில், "ஒன்றாக மதுக் குடிக்கும் பழக்கம் கொண்ட தம்பதிகளுக்கு இடையே நல்லுறவு இருக்கிறது. இதை நாங்கள் டிரிங்கிங் பாட்னர்ஷிப் என்று அழைக்கிறோம். ஆண் ஒருவர் தனது மனைவியுடன் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டு இருந்தால் அது உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும்.
அவர்களுக்கு இடையே நல்லதொரு புரிதலும் இருக்கிறது. இப்படி ஒன்றாக மதுக் குடிக்கும் தம்பதியின் திருமண வாழ்க்கை ஒப்பீட்டளவில் திருப்திகரமாக இருப்பதும் தெரிய வருகிறது" என்றார்.
பிரச்சினைகளும் இருக்கு: இந்த ஆய்வு மது அருந்துவதை ஊக்குவிப்பது போல் தோன்றலாம்.. ஆனால் உண்மையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் இதில் விளக்கி உள்ளனர். இந்த நல்ல பாதிப்புகள் எல்லாம் குறைந்த அளவு மட்டுமே மது குடித்தால் ஏற்படுமாம். அதிகளவில் மது குடித்தால் அது தம்பதிகளிடையே மோதல் மற்றும் அதிருப்தியைத் தான் ஏற்படுத்தும் என்றும் ஒரு கட்டத்தில் அந்த உறவு நிரந்தரமாக முறிந்து போகவும் வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications