நீடா அம்பானி அணிந்திருந்த தங்க சேலையை உருவாக்க 1,900 மணி நேரமாச்சா? வாயை பிளக்க வைத்த "வைர ஜாக்கெட்"
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அளித்த இரவு விருந்தில் அம்பானி தம்பதியினர் கலந்து கொண்டிருந்த நிலையில், அம்பானியின் மனைவி நீதா அம்பானி குறித்த ஆச்சரியமான செய்தியொன்று மீண்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அது என்ன?
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, நாட்டின் மிகப் பிரபலமான பெண் தொழிலதிபராக விளங்கி கொண்டிருக்கிறார்..

அறக்கட்டளை: திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவராகவும் நீதா அம்பானி பதவி வகித்து வருகிறார். அத்துடன், ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளையும் செய்து வருகிறார். குறிப்பாக, கல்வி, மருத்துவம், கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றில் நிதியுதவியையும் வழங்கி வருகிறார்.
உலகளவில் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாக கருதப்படும் மும்பையில் உள்ள 27 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடமான ஆன்டிலியாவில் வசித்து வருகிறார்.
ஆடம்பர பொருட்கள்: அதுமட்டுமல்ல, எப்போதுமே ஆரம்பரமான பொருள்களையே பயன்படுத்துவார்... காஸ்ட்லி வாட்ச்கள், காலணிகள், ஹேண்ட்பேக்குகள், அவ்வளவு ஏன், வீட்டில் பயன்படுத்தும் காபி மக்குகள் வரை பெரிய பிராண்டுகளையே பயன்படுத்துபவர்.. நீடா அம்பானி பிரபலமான பெண்மணி என்பதால், அவரது நடை, உடை, வாழ்க்கை முறையே தனித்துவம் நிறைந்தவை என்பதால், அனைத்துமே இணையத்தில் வைரலாகிவிடும்.
அந்தவகையில், இப்போது மீண்டும் நீடா அம்பானியின் சேலை, இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.. இந்த தனியார் வரவேற்பு விழாவில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியும், ரிலையன்ஸ் பவுண்டேசன் தலைவருமான நீடா அம்பானியும் பங்கேற்றார்.
சேலை- ஜாக்கெட்: அப்போது நீடா அம்பானி அணிந்திருந்த சேலை, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.. இந்திய பாரம்பரியத்தில் ஒன்றான சேலையை அணிந்து வந்திருந்தார் நீடா.. அதிலும் பழம்பெருமை வாய்ந்த காஞ்சிப்பட்டு சேலையை அணிந்திருந்தார்.. அந்த சேலையில், பழமைவாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், 2 தலைக்கழுகு, மயில், கோபுரங்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டதாகும்..
ஏராளமான வேலைப்பாடுகள் மற்றும் ப்ரெஞ்ச் நாட்ஸ் டிசைன்கள் கொண்ட இந்த சேலையை உருவாக்குவதற்கு 1,900 மணிநேரங்கள் ஆனதாம்.. நுணுக்கமாக கை வேலைப்பாடுகள், தங்க எம்பிராய்டெரி நுட்பங்கள் சேலையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன..
ஆச்சரியம்: இந்த சேலைக்கு மேட்ச்சாக நீடா அம்பானி அணிந்திருந்த வெல்வெட் ஜாக்கெட், மணீஷ் மல்ஹோத்ராவால் உருவாக்கப்பட்டது. அந்த ஜாக்கெட்டில் வைரங்களால் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த சேலை, ஜாக்கெட்டின் விலை என்னவென்று தெரியவில்லை.. ஆனால், எப்படியும் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications