டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் காஞ்சி பட்டுப்புடவை+ மரகத நெக்லஸில் ஜொலித்த நீடா அம்பானி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு காஞ்சி பட்டுப் புடவை அணிந்து சென்றார் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி. இந்த புடவை அனைவரையும் ஈர்த்தது. அந்த புடவையின் ஸ்பெஷல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா இன்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

அது போல் சீன அதிபர் ஜின் பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அது போல் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று அம்பானி தம்பதி நேற்று அமெரிக்கா சென்றனர். பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் உணவு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் முகேஷ் அம்பானியும் நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டிரம்ப்பை இருவரும் சந்தித்து பேசினர். இந்த நிகழ்வில் நீடா அம்பானி அணிந்திருந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலை பலரையும் கவர்ந்தது. அவர் அணிந்திருந்த புடவையில் காஞ்சிபுரத்தின் பழம்பெரும் வாய்ந்த கோயில்களின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

மயில், கோபுரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை , தேசிய விருது பெற்ற கலைஞரான கிருஷ்ணமூர்த்தி வடிவமைத்திருந்தார். அந்த புடவையில் 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய டிசைன்கள் இடம்பெற்றிருந்தன.
அவருடைய ஜாக்கெட்டை காஸ்ட்யூமர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்திருந்தார். அதில் நிறைய மணிகள் வைத்து வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் நீடா அம்பானி 200 ஆண்டுகள் பழமையான நெக்லெஸ்ஸை அணிந்திருந்தார். அதில் ரூபி, வைரம், முத்து, மரகதம் உள்ளிட்ட கற்கள் இடம் பெற்றிருந்தன.

பல்வேறு தருணங்களில் நீடா அம்பானி பட்டுப்புடவை அணிந்திருந்தார். அது போல் அவரிடம் பழமையான நகைகள் உள்ளன. இவற்றை தனது வீட்டு விசேஷங்களுக்கு அவர் அணிந்திருப்பார், புடவைக்கு மேட்சிங்காக ஹேண்ட் பேக் உள்ளிட்டவைகளை அணிந்து டிரெண்ட் செட்டரானார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications