இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
வாஷிங்டன்: 2022-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு
பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று மருத்துவத்துறைக்கு அளிக்கப்பட்டது. இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு மருத்துவத்துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

3 பேருக்கு அறிவிப்பு
இன்றைய நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளான இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரியா
அதன்படி, பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுக்காக இவர்கள் 3 பேருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலான போட்டோன் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆய்வுகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான..
கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஸியுகுரோ மனபில், ஜெர்மனியின் கிளஸ் ஹஸ்சல்மேன் மற்றும் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருந்தது. பூமியின் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக இவர்களுக்கு கடந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications