பத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி
வாஷிங்டன்: பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி சவுதி துணை தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்த நாட்டு, முடி இளவரசர் முகமது பின் சல்மானை நோக்கி யாருமே கை காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி. இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் பற்றி விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். இந்த நிலையில், ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ட்ரம்ப் சந்தித்து பேசியிருந்தனர். இதுதொடர்பாக இன்று டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
"பத்திரிக்கையாளர் கொலை சம்பவத்தால் நான் மிகவும் கோபமடைந்துள்ளேன். ஆனால் இதுவரை யாரும் நேரடியாக சவுதி அரேபியாவின் இளவரசரை நோக்கி விரலை காட்டவில்லை. அவர்கள் (சவுதி) இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர். விசாரணை நடத்தி வருகிறார்கள்". இவ்வாறு, ட்ரம்ப் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications