Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குணமடைந்த பிறகும் விடாது.. அலறவிடும் நோரோவைரஸ்.. அமெரிக்காவில் கொத்து கொத்தாக பாதிப்பு! நிலைமை மோசம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது சத்தமே இல்லாமல் மோசமான ஒரு வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. நோரோவைரஸ் என்ற இந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் ஆபத்தான அளவில் இருக்கிறதாம். இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்ன.. இது எந்தளவுக்கு ஆபத்தானது.. இந்தப் பாதிப்பு ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 2019ல் உலக நாடுகளைக் கொரோனா பாதிப்பு மிக மோசமாகத் தாக்கியிருந்தது. மிக பெரிய போராட்டத்திற்கு பிறகே அதிலிருந்து நாம் மீண்டோம். இதனால் வேறு எதாவது வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது மக்களிடையே இயல்பாகவே அச்சம் அதிகரிக்கும். அப்படித் தான் இப்போது அமெரிக்காவில் 'நோரோவைரஸ்' பாதிப்புகள் சமீப வாரங்களாக அதிகரித்து வருகிறது.

USA world

நோரோவைரஸ்

நோரோவைரஸ் என்பது இரைப்பைக் குடல் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இந்த வைரஸ் மிக எளிதாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுமாம். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாந்தி அல்லது மலத்தில் காணப்படும் இந்த வைரஸ், கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றவர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய்ப் பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்தாலும் கூட, அதன் பிறகும் இரண்டு வாரங்கள் வரை, அவரது உடலில் இருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு இருக்கிறதாம். இதுவே இந்த நோயை அச்சுறுத்துவதாக மாற்றுகிறது.

அறிகுறிகள்

இந்த நோயின் பிரதான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலிகள் ஆகியவை உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோரோவைரஸ் பாசிட்டிவ் விகிதம் வெறும் 7%ஆக இருந்தது. ஆனால், இப்போது அது உயர்ந்து 14%ஆக அதிகரித்துள்ளது. இது வரும் காலங்களில் மேலும் கூட உயரலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நோரோவைரஸ் பாதிப்பு பெரும் தலைவலியாக மாறுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலையில், குறைந்தது ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டி உள்ளது. மேலும், இதனால் சுமார் 900 இறப்புகளுக்கும் ஏற்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களால் இந்த நோரோவைரசால் உயிரிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர்.

வேகமாகப் பரவுகிறது

அதேபோல கழிவுநீரில் நோரோவைரஸ் கண்டறியப்படுவதும் நாடு முழுவதும் 69% அதிகரித்துள்ளதாம். குறிப்பாக லூசியானா, மிச்சிகன் மற்றும் இண்டியானா போன்ற மாகாணங்களிலேயே இதன் பாதிப்பு தீவிரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோராவைரஸ் பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் கூட இதனால் மிகப் பெரிய ஆபத்து எனச் சொல்ல முடியாது என்றே அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்,

இந்தியாவுக்குப் பிரச்சினையில்லை

இந்தியாவில் இந்தப் பாதிப்பு பெரிதாக இல்லை என்றாலும் கூட எந்தவொரு வைரஸ் பாதிப்பாக இருந்தாலும் அதில் இருந்து பாதுகாப்பாக இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பார்க்கலாம்! கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் சோப்பு போட்டு கைகளை 20 விநாடிகள் வரை கழுவுங்கள்.

என்ன செய்ய வேண்டும்

திடீரென உங்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். யார் உடனும் நெருங்கிப் பழக வேண்டாம். வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது மற்றவர்களுக்காகச் சமைக்க வேண்டாம். சமைக்கும்போது அதன் மூலம் வைரஸ் பரவும் என்பதால் ரிஸ்க் வேண்டாம். சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.

அசைவ உணவுகளை நன்கு சமைக்க வேண்டும், பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவ வேண்டும்.. சமைக்காத அல்லது சரியாக வேகாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது அதிகளவில் நீரிழப்பு ஏற்படும் எனவே அப்போது தொடர்ச்சியாகத் தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+