உலகை சூழும் இருண்ட காலம்.. பாபா வாங்கா மட்டுமில்லை.. "அவர்" கூட அதையே தான் சொல்லி இருக்காரு! பகீர்
வாஷிங்டன்: எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து துல்லியமான கணிப்புகளைச் செய்தவர்கள் நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வாங்கா.. இவர்கள் இருவருக்கும் இடையே பல நூற்றாண்டு இடைவெளி என்றாலும் கூட இவர்கள் பல கணிப்புகளை ஒரே போல செய்துள்ளனர். அதில் பல உண்மையாகவும் நடந்துள்ளன. இதற்கிடையே இவர்கள் 2025ல் உலகம் இருண்டு காலத்தை நோக்கிச் செல்லும் என்று கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது அனைவருக்குமே பிடிக்கும். அப்படி வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து துல்லியமான கணிப்புகளை வெளியிட்டவர்கள் நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வாங்கா..

கணிப்புகள்: இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் இல்லை.. 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தற்போதுள்ள பிரான்ஸ் பகுதியில் வாழ்ந்தவர் நோஸ்ட்ராடாமஸ். மறுபுறம் கடந்த 20ம் நூற்றாண்டில் ஓட்டாமன் பேரரசில் பிறந்து வாழ்ந்தவர் பாபா வாங்கா.. இவர்கள் இருவரும் பல நூறு ஆண்டுகள் பிரிக்கப்பட்டு இருந்தாலும் பல கணிப்புகளை ஒரே போல விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதில் பல உண்மையாகவும் இருந்துள்ளன.
இவரும் 2025ம் ஆண்டிற்கு இருவரும் விட்டுச் சென்று கணிப்புகள் பகீர் கிளப்புவதாகவே உள்ளன. ஐரோப்பாவில் மிகப் பெரிய போர் வெடிக்கும் என்றும் உலகெங்கும் பேரழிவு நிகழ்வுகள் பல ஏற்படும் என இருவருமே கணித்துள்ளனர்.
கொடூரம்: குறிப்பாக நோஸ்ட்ராடாமஸ் ஐரோப்பிய மண்ணை சேர்ந்தவர்கள் கொடூரமான போர்களில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும், பழங்காலத்தில் பரவிய பிளேக் நோயை விட மிக மோசமான நோய் கிருமி பரவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஐரோப்பா கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்ட அவர், இது பிரிட்டன் தொடர்புடையதாகக் கூட இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
பாபா வாங்காவும் கிட்டத்தட்ட இதே கணிப்பை விட்டுச் சென்று இருக்கிறார். 2025இல் ஐரோப்பாவில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், இது சர்வதேச அளவில் மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கணித்துள்ளார். அதாவது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வெடிக்கும் போர் சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணித்துள்ளார்.
மற்ற கணிப்புகள்: இது தவிர வேறு சில கணிப்புகளையும் இருவரும் விட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாக அடுத்தாண்டு நாம் வேற்று கிரகவாசிகளின் வருகையைப் பார்க்கலாம் என்று பாபா வாங்கா தெரிவித்துள்ளார். குறிப்பாக விளையாட்டு நிகழ்வு ஒன்றின் போது இந்த வேற்று கிரகவாசிகளின் வருகை இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், டெலிபதியில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு நிகழும் என்றும் பாபா வங்கா கூறியிருக்கிறார்.
அதேபோல நோஸ்ட்ராடாமஸும் வேறு சில கணிப்புகளைக் கொடுத்துள்ளார். முதலில் உக்ரைன் ரஷ்யா மோதல் முடிவுக்கு வரும் எனக் கூறியிருக்கிறார். அடுத்து பிரேசில் உள்ளிட்ட பல பகுதிகளில் இயற்கை பேரழிவு மோசமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். எரிமலை சீற்றம் மற்றும் வெள்ள பாதிப்புகள் அதிகம் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் உலகின் பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். இந்த நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு நாடு சூப்பர் பவராக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இருண்ட காலம்: அதாவது இருவருமே 2025ல் உலகில் சில பாசிட்டிவ் விஷயங்களைக் கணித்து இருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மோசமான நிகழ்வுகளே அதிகரிக்கும் என அவர்கள் கணித்துள்ளனர். ஒட்டுமொத்த பூமியும் இருண்ட காலத்தை நோக்கிச் செல்லும் என்பதையே இருவரும் கணித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications