எங்களை யாராலும் தடுக்க முடியாது... அமெரிக்க கலவரத்தில் உயிரிழந்த பெண்ணின் கடைசி ட்வீட்
வாஷிங்டன்: எங்களை யாராலும் தடுக்க முடியாது என்று அமெரிக்க கலவரத்தில் உயிரிழந்த பெண்ணின் கடைசி ட்வீட் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ஜோ பைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டித்து, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று காலை திடீரென்று வன்முறையாக மாறியது. இதில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த அப்பெண் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
உயிரிழந்த அந்தப் பெண் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அஷ்லி பாபிட் என்பதும் அவர் 14 ஆண்டுகள் அமெரிக்க விமானப்படையில் பணிபுரிந்தவர் என்றும் அமெரிக்கச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான அவரது கடைசி ட்விட்டர் பதிவுதான் தற்போது வைரலாகி வருகிறது. வன்முறையில் உயிரிழப்பதற்கு முன் அஷ்லி பாபிட், "எங்களை யாராலும் நிறுத்த முடியாது. அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யலாம். ஆனால் புயல் இங்கே உருவாகிவிட்டது, அது 24 மணி நேரத்திற்குள் தலைநகரைத் தாக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
அஷ்லி பாபிட்டின் மரணத்தை வாஷிங்டன் போலீஸார் உறுதிப்படுத்தினர். இருப்பினும், அவர் எவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்பது குறித்துத் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறையாளர்கள் நுழைந்தபோது குழப்பமான சூழல் ஏற்பட்டது. வன்முறையாளர்களை தடுக்க பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று வாஷிங்டன் போலீசார் தெரிவித்தனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications