எங்க பாஸ் எங்களுக்கு வேண்டும்.. கள்ள உறவு சர்ச்சைக்கு பிறகும் ஜென்சனுக்கு ஆதரவாக என்விடியா ஊழியர்கள்
வாஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரை மீண்டும் அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று அந்நிறுவன ஊழியர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங்குடனான தொடர்பு உள்ளிட்ட சர்ச்சைகள் காரணமாக அவர் பதவி விலகிய போதிலும், என்விடியாவில் வேலை செய்யும் ஊழியர்கள் பலரும் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
உலகின் மிக பெரிய ஏஐ சிப் நிறுவனமான என்விடியாவின் சிஇஓவாக இருந்த ஜென்சன் ஹுவாங்கை சுற்றி கடந்த சில நாட்களாகவே சர்ச்சை இருந்து வருகிறது. அவர் சீனா உளவாளி பெண் என சந்தேகிக்கப்படும் தொழிலதிபருடன் தொடர்பில் இருந்ததாக வெளியான தகவல் உலகையே அதிர வைத்தது. இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஜென்சன் பதவி விலகினார்.

என்விடியா
இருப்பினும், என்விடியா நிறுவனத்திற்கு ஜென்சன் தொடர்ந்து தலைமை தாங்க வேண்டும் என்றே அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பலரும் கருதுகிறார்கள். என்விடியா நிறுவனத்தின் சஜ்ஜஷன் பாக்ஸில் இதுவரை 1,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜென்சனுக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கிறார்கள். ஹுவாங்கை மீண்டும் சிஇஓவாக நியமிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆகரவு
ஜென்சன் பதவி விலகுவதற்கு முன்பே, அங்கு வேலை செய்து வந்த இரு சீனியர் ஊழியர்கள் இது குறித்து கருத்து கூறியிருந்தனர். அதில் ஜென்சன் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் முன்பு, ஊழியர்களின் கருத்துகளையும் இயக்குநர் குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர். அதற்கு கீழ் கமெண்ட் போட்ட பலரும், "எங்கள் பாஸை மீண்டும் அழைத்து வாருங்கள்" என்பது போலவே பதிவிட்டிருந்தனர். இன்னொரு ஊழியர், "நாம் அனைவரும் மனிதர்கள்தான். தவறுகள் செய்யலாம். ஜென்சன் பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதாவது ஜென்சன் பதவி விலகும் முன்பே இயக்குநர் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஊழியர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். ஆனால், விசாரணை தொடங்கிய உடனேயே ஜென்சன் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் இது தொடர்பாகவும் ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விசாரணை நடக்கும்போதே ஜென்சன் இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என்றும் இது தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை என்றும் சில ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
2வது வாய்ப்பு
சில ஊழியர்கள் மேலும், "நான் ஜென்சனுக்கு ஆதரவாக நிற்கிறேன். எந்தவொரு மனிதரும் தவறே செய்வார். ஆனா், நமது நிறுவனத்திற்கு மிக பெரிய பங்களிப்பை செய்த ஒருவருக்கு இன்னொரு வாய்ப்பை தரலாம். அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு உதவிய மனிதரையே கைவிடுவது சரியாக இருக்காது" என பதிவிட்டுள்ளனர். அதாவது சுற்றி சுற்றி ஜென்சனுக்கு ஆதரவாகவே என்விடியா ஊழியர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ஜென்சன்
1993ம் ஆண்டு என்விடியாவை தொடங்கிய இணை நிறுவனர்களில் ஜென்சன் ஹுவாங்கும் ஒருவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜென்சன் என்விடியா நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். அவரது கள்ள உறவு விவகாரம் சர்ச்சையான நிலையில், தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில் மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டார். அதில் அவர், "நான் என் மனைவிக்கு துரோகம் செய்தேன். எனது செயல்கள் அவரையும் எங்கள் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளன. நான் செய்ததற்கு எந்த சாக்குப்போக்கும் இல்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications
