ட்ரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா.. ட்ரம்புக்கு உடனே பரிசோதனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடும்ப (வேலட்) தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Recommended Video
இதையடுத்து உடனடியாக அதிபர் டிரம்ப்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

அமெரிக்காவில், கொரோனா வைரசால் சுமார், 75 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்குமுன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அவருக்கு, பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்தான் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், அதிபர் டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்துவரும் வேலட் என்று அழைக்கப்படக்கூடிய, தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
"வெள்ளை மாளிகை வளாகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகக வெள்ளை மாளிகை மருத்துவ பிரிவு சமீபத்தில் எங்களுக்கு தெரிவித்தது" என்று வெள்ளை மாளிகையின் துணைச் செயலாளர் ஹோகன் கிட்லி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "அதிபரும், துணை அதிபரும் பரிசோதனைக்கு உட்பட்டனர். அவர்களுக்கு, நோய் தாக்கம் இல்லை என தெரியவந்துள்ளது. அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்." இவ்வாறு அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications