இந்தியாவுக்கு வாங்க- உங்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள்- கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, உங்களை வரவேற்க இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.
சர்வதேச நாடுகள் பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. இதில் ஒன்று Quadrilateral Security Dialogue எனப்படும் குவாட் அமைப்பு. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன.
சீனாவுக்கு எதிரான இந்தியாவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு குவாட். இந்த கூட்டமைப்பின் உச்சிமாநாடு இன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, 4 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் 5 முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

அடோப் சாந்தனு நாராயண்
அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண், குவால்கம் நிறுவன தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோன் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின் போது, டிஜிட்டல் இந்தியா திட்டம், பல்வேறு துறைகளில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

மோடி- கமலா ஹாரிஸ் சந்திப்பு
இதையடுத்து அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது கொரோனா பரவல் நிலவரம், ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர். முன்னதாக பிரதமர் மோடியும் ஹமலா ஹாரிஸும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
Recommended Video

கமலா ஹாரிஸுக்கு அழைப்பு
அதில் பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக உங்களைத் தேர்வு செய்தது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ் . ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையின் கீழ் இந்தியா- அமெரிக்கா உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். 2-வது கொரோனா அலையால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான நட்பு நாடுகள். இரு தேசங்களும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா- அமெரிக்கா உறவு
மேலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே வலுவான மக்கள் தொடர்பு ஒரு பாலமாக இருக்கிறது. இருநாட்டு மக்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு பாராட்டு
இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிக முக்கியமான நட்புநாடு கொரோனா பாதிப்பின்போது, இருநாடுகளும் ஒருங்கிணைந்து உதவி செய்தன. கொரோனா பரவல் தொடக்கத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. இந்தியா மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் முடிவை வரவேற்கிறோம் என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications