"இன்னைக்கு ஓவரா ஜாம் ஆகுது.." சீனாவில் இருந்த வந்த பெஸ்ட் பிரண்ட் மோடி! உளறி கொட்டிய அதிபர் பைடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருக்கும் புதின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடி குறித்து மாற்றி மாற்றி உளறிய சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.
அமெரிக்க அதிபராக இப்போது இருப்பவர் பைடன். கடந்த 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடித்து இவர் அதிபரானார். அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலிலும் மீண்டும் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அதேநேரம் பைடனுக்கு இப்போது 80 வயதாகிறது. அவருக்கு அதிக வயதாகிவிட்டதால், அவரால் அமெரிக்காவில் திறம்பட வழிநடத்த அதிபராகச் செயல்பட முடியாது என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது.

அமெரிக்க அதிபர்: அதற்கேற்றார் போல நடந்து செல்லும் போது, படியேறும் போது ஸ்லிப் ஆகி விழுவது, பேசும்போது வார்த்தைகள் குளறுவது போன்ற சம்பவங்களில் அவர் சிக்குவார். அதேபோலத் தான் இப்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி குறித்து அவர் பேசும் போது, வார்த்தை ஸ்லிப் ஆகிவிட்டது. இந்த வீடியோவை எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சியினர் டிரெண்ட் செய்து விமர்சித்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றும் போது தெரியாமல், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்குப் பதிலாக "ஈராக்" போரில் தோல்வியடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் இருந்து வந்திருந்த பிரதமர் மோடியை சந்தித்தேன் எனச் சொல்வதற்குப் பதிலாகச் சீனாவில் இருந்து வந்திருந்த பிரதமர் மோடியைச் சந்தித்தேன் எனக் கூறியது சர்ச்சையானது.
பைடன்: வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த பைடனிடம், ரஷ்யாவில் நடந்த வாக்னர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பைடன், "அங்கே என்ன நடக்கிறது எனச் சொல்வது கடினம், ஆனால் அவர் ஈராக்கில் (உக்ரைனுக்கு பதிலாக ஈராக் எனத் தவறுதலாகக் குறிப்பிட்டார்) நடக்கும் போரில் புதின் தோற்று வருகிறார். இது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல உள்நாட்டிலும் அவர் தோற்று வருகிறார்.
ஒட்டுமொத்த உலகமும் அவரை புறக்கணிக்கத் தொடங்கிவிட்டது. நேட்டோ. ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல. ஜப்பான். உட்பட பல நாடுகள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டன.. ஈராக் [உக்ரைன்] மீதான தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் ஒன்றாக வரும்.. அவர்கள் அனைவரும் நேட்டோவில் இணைவார்கள் என்று சொல்ல முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
உளறிய பைடன் : முன்னதாக நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பைடன் பிரதமர் மோடி குறித்துப் பேசும் போது அவர் சீனாவைச் சேர்ந்தவர் என உளறிக் கொட்டினார். அவர் கூறுகையில், "எனது புதிய சிறந்த நண்பரை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.. முன்பு சிறிய நாடாக இருந்து இப்போது உலகிலேயே மிகப்பெரிய நாடான சீனா, மன்னிக்கவும் இந்தியப் பிரதமரை நான் சந்தித்தேன். இந்தியா ஒரு நிரந்தர கூட்டணியை எதிர்பார்க்கவில்லை.. ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் சில பாதுகாப்புகளை எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
இப்படி ஒரே மீட்டிங்கில் பல முறை பைடன் உளறிய சம்பவம் பேசுபொருள் ஆனது. அதேநேரம் பைடனுக்கு இதுபோல வார்த்தைகள் ஸ்லிப் ஆவது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் பல முறை இதுபோல நடந்துள்ளன. இதை வைத்தே அவருக்கு வயதாகிவிட்டதாகவும் இதனால் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்றும் அந்நாட்டின் குடியரசு கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications