பிரதமருக்கு அதிபர் டிரம்ப் தந்த கிஃப்ட்.. பார்த்தவுடன் பூரித்த மோடி! அடடே எவ்வளவு ஸ்பெஷல் பாருங்க!
வாஷிங்டன்: பிரதமர் மோடி இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே பல்வேறு விவகாரங்களில் ஆலோசனை நடைபெற்றது. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அளித்த கிஃப்ட் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு விவேக் ராமசாமி, எலான் மஸ்க் உள்ளிட்ட பலரையும் அதிபர் டிரம்ப் இப்போது சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டிரம்ப்- மோடி சந்திப்பு:
தொடர்ந்து வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு அதிபர் டிரம்பை நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் என்று பல்வேறு விவகாரங்களில் விரிவான ஆலோசனைகள் நடத்தினர். இதற்கிடையே இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த கிஃப்ட் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
Our Journey Together என்ற அந்த போட்டோ புக்கை கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் பரிசளித்துள்ளார். இதில் கடந்த 2019 செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி அப்போது "ஹவுடி மோடி" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அது தொடர்பான போட்டோக்களும் இடம்பெற்றுள்ளது.
டிரம்ப் அளித்த பரிசு:
ஓவல் அலுவலகத்திற்குப் பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப், இரு தரப்பு ஆலோசனையைத் தொடங்கும் முன்பு இந்த பரிசை வழங்கினார். "மிஸ்டர் பிரதமர், நீங்கள் கிரேட்" என எழுதி அதில் டிரம்ப் கையெழுத்துப் போட்டு இந்த பரிசை வழங்கினார். மேலும், கடந்த 2020ல் முதல்முறையாக அதிபர் பதவியில் இருந்தபோது டிரம்ப் அரசு இந்தியா வந்திருந்தார். அப்போது அவர் நமஸ்தே டிரம்ப் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த நிலையில், அந்த போட்டோக்களும் இதில் உள்ளன. மேலும், உலக அதிசயமான தாஜ்மஹால் முன் மெலனியாவுடன் டிரம்ப் எடுத்திருந்த போட்டோவும் அதில் இடம்பெற்றுள்ளது.
டிரம்ப் சொல்வது என்ன:
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்துள்ளதைக் கவுரவமாகவே கருதுகிறேன். அவர் எனக்கு நீண்ட காலமாகச் சிறந்த நண்பர். நாங்கள் ஒரு அற்புதமான உறவைக் கொண்டு இருக்கிறோம்" என்று கூறினார். இருவரது நட்பு குறித்துப் புகழ்ந்து பேசினாலும், வரி விஷயத்தில் இந்தியாவுக்குச் சாதகமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் இந்தியாவுடன் பரஸ்பர உறவில் இருக்கிறோம்.. அதேநேரம் இந்தியா எவ்வளவு வரி விதித்தாலும், அதே அளவுக்கு நாங்களும் அவர்கள் மீது வரி விதிக்கப் போகிறோம்" என்றார்.
இருப்பினும், இரு தலைவர்களும் வரி விஷயத்தில் உள்ள வேறுபாடுகளை வரி பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க ஒப்புக்கொண்டனர். மேலும், வரி விவகாரம் குறித்து சீக்கிரம் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தரப்பு அதிகாரி தெரிவித்தார்.
பிரதமர் மோடி:
அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசுகையில், "இங்கு நான் அதிபர் டிரம்பை பாராட்ட விரும்புகிறேன். அதிபர் டிரம்ப்பிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், அவர் தேசிய நலனையே உச்சமாகக் கருதுகிறார். அவரைப் போலவே, நானும் இந்தியாவின் தேசிய நலனைத் தான் முதன்மையாக வைத்திருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications