போப் ஆண்டவர் உடல் நிலை மோசம்.. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக வாட்டிகன் தகவல்
வாஷிங்டன்: கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் உடல் நலம் பெற உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 88-வயதான போப் பிரான்சிஸ்க்கு சிறு வயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்டதால், பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது கடந்த 6 ஆம் தேதி மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. எனினும், அவர் தொடர்ந்து மத பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவரது உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து உடனடியாக ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது போப் பிரான்சிஸ்க்கு நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் போப் ஆண்டவர் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அவரது உடல் நிலை இன்னும் மோசமான நிலையிலேயே இருப்பதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் சுய நினைவுடன் தான் இருக்கிறார் எனவும் மூச்சு விடுவதில் உள்ள சிரமத்திற்காக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்கு ரத்தத்தில் பிளேட்லட்கள் குறைவாக இருந்ததால் ரத்தம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் உடல் நிலை மோசமாக இருப்பதாக முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் உடல் நலம் பெற உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications