மகளின் காதலருடன் உடலுறவு.. கர்ப்பிணி மகளின் சிசுவை வெளியே எடுத்து கொன்ற தாய்! கொடூரம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 39 வார கர்ப்பிணியாக இருந்த 22 வயது ரெபெக்கா பார்க் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தாய் கோர்ட்னி பார்தலோமியூ, மகளின் வருங்கால கணவர் ரிச்சர்ட் ஃபார்லருடன் ஏற்கனவே பாலியல் உறவில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

எப்போதுமே தாய்க்கும் மகளுக்குமான உறவு பாசம் நிறைந்ததாகவே இருக்கும். அதிலும் மகள் கருவுற்று இருந்தால் எவ்வளவு கோபம் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டார் தாய்மார்கள் பார்த்து கொள்வார்கள். ஆனால், சில பெண்கள் கொடூரமான செயல்களில் ஈடுபடவே செய்கிறார்கள். அப்படியொரு கொடூரம் தான் அமெரிக்காவில் நடந்தது.

Pregnant Woman Murder Case

என்ன நடந்தது!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 41 வயதான கோர்ட்னி மற்றும் அவரது கணவர் பிராட்லி பார்தலோமியூ, 48 ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொன்றது வேறு யாரும் இல்லை.. 22 வயதே ஆன அவர்கள் மகள் ரெபெக்கா! இத்தனைக்கும் ரெப்பெக்கா அப்போது கருவுற்று இருந்தார்.

மருமகனுடன் உறவு

2025 நவம்பரில் மாயமானதாக சொல்லப்பட்ட ரெபெக்கா, பின்னர் மானிஸ்டீ தேசிய வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், குழந்தை மட்டும் அங்கு இல்லை. வழக்கின் விசாரணையின்போது ரெபெக்காவின் வருங்கால கணவரும், குழந்தையின் தந்தையுமான ரிச்சர்ட் ஃபார்லர் சாட்சியம் அளித்தார். ரெபெக்கா தாயார் கோர்ட்னியுடன் 2023 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பாலியல் உறவில் இருந்ததாக அவர் கூறினார். அந்த உறவு முடிந்த சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் ரெபெக்காவுடன் தான் பழகத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

என்ன நடந்தது!

மேலும், அப்போது கோர்ட்னி தனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்ததாகவும் ஃபார்லர் கூறினார். ரெபெக்கா காணாமல் போவதற்கு முந்தைய இரவு அவரது பிரசவ வலி ஏற்பட்டதாக ஃபார்லர் தெரிவித்தார். நண்பர் ஒருவர் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது கோர்ட்னி, ரெபெக்காவை தானே அழைத்து செல்வதாகக் கூறி காரை நிறுத்த முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அப்போது ரெபெக்காவுக்கு பிரசவம் நடக்கவில்லை. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். நவம்பர் 3ம் தேதி தான் ரெபெக்கா கடைசியாக காணப்பட்டார். அதன் பிறகு நவம்பர் 25-ம் தேதி ரெபெக்காவின் உடல் மானிஸ்டீ தேசிய வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இல்லை.

படுகொலை

ரெபெக்கா காணாமல் போன பிறகு கோர்ட்னிக்கும் ஃபார்லருக்கும் இடையேயான 90க்கும் மேற்பட்ட மெசேஜ் உரையாடலும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் ரெபெக்கா வீடு திரும்பவில்லை.. ரெபெக்காவிடம் 2000 டாலர் பணம் இருந்த நிலையில், அதுவும் மாயமானதாக அவர் கூறியிருக்கிறார். போலீசார் விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

சிசு கொலை

அதாவது கோர்ட்னியும் பிராட்லியும் ரெபெக்காவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கொன்றதாக அரசு தரப்பு குற்றம்சாட்டுகிறது. முதலில் தனது மகள் கொலையில் தனக்கு தொடர்பில்லை என்று கோர்ட்னி மறுத்துள்ளார். இருப்பினும், அவரது செல்போன் சிக்னல் ரெபெக்கா சடலம் இருந்த இடத்திற்கு அருகே இருந்ததை போலீசார் கண்டுபிடித்த பிறகு, உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கத்தியால் ரெபெக்காவை தாக்கியதாகவும், காருக்குள்ளேயே கொலை செய்ததாகவும் கோர்ட்னி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ரெபெக்கா உயிருடன் இருந்தபோதே வயிற்றில் இருந்த குழந்தையை அகற்றியதும் தெரிய வந்தது. குழந்தை உயிரிழந்ததாகவும், இதனால் குழந்தையின் உடலை குப்பைத்தொட்டியில் வீசியதாகவும் கோர்ட்னி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+