முடிவுக்கு வரும் போர்? உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்ட புதின்.. டிரம்ப் குட்நியூஸ்
வாஷிங்டன்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா தலைமையில் இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் தான்‛‛உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ஒரு வாரம் வரை தாக்குதலை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் கேட்டேன். அவரும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளார்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் சில வாரங்களில் 4வது ஆண்டை எட்ட உள்ளது. அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்த முயன்று வருகிறார். இருதரப்பிடமும் பேசி வருகிறார். ஆனால் போர் இன்னும் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் தான் அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அதிபர் டொனால் டிரம்ப் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரை நிறுத்த புதின் ஒப்புதல்
‛‛ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தனிப்பட்ட முறையில் கீவ் (உக்ரைன் தலைநகர்) மற்றும் பிற இடங்களில் தாக்குதல்களை ஒரு வாரம் வரை நிறுத்த வேண்டும். ஏனென்றால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது என்று கூறினேன்.
இதனை புதின் ஏற்றுள்ளார். நான் அவரிடம் (புதின்) பேச வேண்டாம். அப்படி பேசுவது எந்த பயனையும் தராது என்றனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டார்'' என்றார்.
உடன்பாட்டில் தொடரும் சிக்கல்
இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவதற்கான முதல் படி என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவும், தொலைபேசியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரிடம் டொனால்ட் டிரம்ப் பலமுறை பேசி உள்ளார். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.
ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை
சமீபத்தில் கூட அபுதாபியில் வைத்து முதல் முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் சார்பில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.
அப்போது இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் நடத்திய முதல் பேச்சுவார்த்தை அதுவாகும். இதனால் அது பாசிட்டிவாக பார்க்கப்பட்டது.
ஜெலன்ஸ்கிற்கு ரஷ்யா அழைப்பு
அதன்பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வரும்படி விளாடிமிர் ஜெலன்ஸ்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, இருநாடுகளும் தங்களின் மின்சாரம் உள்பட பிற எனர்ஜி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியாக இருநாடுகளுக்கு இடையே நடக்கும் விஷயங்கள் ஓரளவு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. இந்நிலையில் தான், கடும் குளிரால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல இடங்களில் தாக்குதல்களை ஒரு வாரம் வரை நிறுத்த புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல் -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா












Click it and Unblock the Notifications