மின்னல் வேகத்தில் பரவும் கொடூர வைரஸ்.. "சாக்லேட்களுக்கு பெரிய ஆபத்து.." பகீர் கிளப்பும் தகவல்
வாஷிங்டன்: இந்த நவீனக் காலத்தில் புதிது புதிதாக வைரஸ்கள் பரவி வருகிறது. அப்படி தான் இப்போது பரவும் புதிய வைரஸ் நாம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்கள் கிடைப்பதில் கூட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இப்போதெல்லாம் திடீர் திடீரென புதிய வைரஸ்கள் பரவுகின்றன. அவற்றை நாம் கண்டறிந்து சில மாதங்களில் அல்லது ஓரிரு வருடங்களில் கட்டுப்படுத்தினாலும் கூட அதற்குள் அவை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

இதற்கிடையே இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் புதிதாக ஒரு வைரஸ் பாதிப்பு பரவுகிறதாம். அவை நமக்குப் பிடித்த சாக்லேட்களுக்கு கூட வரும் காலத்தில் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
கோகோ மரங்கள்: மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கோகோ மரங்களை வேகமாக அழிக்கும் ஒரு கொடிய வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், வரும் காலத்தில் இது சாக்லேட் உற்பத்தியை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த கோகோ மரங்களில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கத் தேவையான கோகோ பீன்ஸ் உற்பத்தி செய்கின்றன. உலகில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டில் பாதி அளவுக்குத் தேவையான கோகோ பீன்ஸ்கள் கானா மற்றும் கோட் டி ஐவரியில் நாடுகளில் இருந்து மட்டுமே வருகிறது.
புதிய நோய்: இந்தச் சூழலில் தான் கானாவில் பரவும் கோகோ ஸ்வால்லன் ஷூட் வைரஸ் நோய் என்பது கோகோ அறுவடையை 15-50% சதவிகிதம் வரை பாதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதனால் அங்குள்ள விவசாயிகள் மிகப் பெரிய இழப்பையும் சந்தித்துள்ளார்களாம்.
மீலிபக்ஸ் எனப்படும் சிறிய பூச்சிகள் தான் இந்த வைரஸை பரப்புகிறது. இவை பாதிக்கப்பட்ட மரங்களை உண்ணும்போது இந்த சிஎஸ்எஸ்விடி வைரஸ் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு பரவுகிறது. இந்த வைரஸ் ஒரு மரத்தைத் தாக்கினால் மரம் வீங்கிவிடும். மேலும், நிறமற்ற இலைகள் மற்றும் சிதைந்த வளர்ச்சி எனப் பல வகை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மோசமான பாதிப்பு: இந்த வைரஸ் தாக்கினால் முதல் ஆண்டே பாதிக்கப்பட்ட மரங்களின் மகசூல் வீழ்ச்சி அடையும். மேலும், சில ஆண்டுகளில் மரம் மொத்தமாக இறந்துவிடும். துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே சுமார் 25 கோடி மரங்கள் ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் அங்குள்ள விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை.. மாறாக உலகின் ஒட்டுமொத்த சாக்லேட் சப்ளைக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
வைரஸ் தானே மருந்தைத் தெளித்து ஒழித்துவிடலாமே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த வைரஸை பரப்பும் மீலிபக் ஒழிப்பது ரொம்பவே கடினம். இதனால் வைரஸை அழிப்பதும் மிக மிகக் கடினமான வேலையாக மாறுகிறது.
தடுப்பது எப்படி: இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "பூச்சிக்கொல்லிகள் மீலிபக்களுக்கு எதிராக நல்ல பலனைத் தராது.. இதனால் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அழித்து.. நோய் பரவுவதை விவசாயிகள் தடுக்க முயல்கின்றனர். ஆனால் இதையும் தாண்டி சுமார் 25 கோடி மரங்கள் இந்த வைரசால் கானாவில் பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.
மரங்களுக்குத் தடுப்பூசி போடுவதும் இந்த நோய் பரவலைக் குறைக்கும். ஆனால், தடுப்பூசிக்கு அதிக செலவாகும் என்பதால் கானா விவசாயிகள் அதற்கு யோசிக்கிறார்கள். மேலும் தடுப்பூசி போடப்பட்ட மரங்களில் கூட கோகோ உற்பத்தி குறைவதாகக் கூறப்படுகிறது
தீர்வு என்ன: இதற்கு நிரந்தர தீர்வு என்றால் ஒன்று தான். அதாவது கோகோ மரங்களை நடும்போதே அவற்றை நெருக்கமாக நடவு செய்யாமல் குறிப்பிட்ட தூரத்தில் நடுவது தான் தீர்வாக இருக்கிறது.. இப்படி செய்வது மீலிபக்ஸ் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பரவுவதைத் தடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், தடுப்பூசி இல்லாத மரங்களைச் சுற்றி தடுப்பூசி போடப்பட்ட மரங்களைக் கொண்டு வருவதும் ஒரு வித பாதுகாப்பைத் தருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications