"உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம்.." 68-வது மாடியில் இருந்து விழுந்து பலியான இளைஞர்.. சோகம்!
பாரீஸ்: உயரமான கட்டிடங்களில் இருந்து சாகசம் செய்த படி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ரெமி லுசிடி, சாகச முயற்சியின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
பிரான்சை சேர்ந்தவர் ரெமி லுசிடி. 30-வயதான இவர் உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசங்களை செய்து வருகிறார். பன்னடுக்கு கட்டிடங்களில் ஏறி ஆபத்தான முறையில் நின்ற படி தனது சாகசங்களை காட்டும் ரெமி லுசிடி அங்கிருந்தபடி செல்பி எடுத்து தனது சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி வந்தார். இவரது சாகசங்களை பார்த்து பல லட்சம் பேரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.

பிரான்சை சேர்ந்தவர் ரெமி லுசிடி. 30-வயதான இவர் உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசங்களை செய்து வருகிறார். பன்னடுக்கு கட்டிடங்களில் ஏறி ஆபத்தான முறையில் நின்ற படி தனது சாகசங்களை காட்டும் ரெமி லுசிடி அங்கிருந்தபடி செல்பி எடுத்து தனது சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி வந்தார். இன்ஸ்டாகிராமில் தனது சாகசங்களை வெளிப்படுத்தி படங்களை ரெமி லுசிடி பதிவேற்றம் செய்து இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிரபலமாக விளங்கி வந்த ரெமி லுசிடி ஹாங்காங்க் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள 68 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது, கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் விவரம் வருமாறு:- ஹாங்காங்கில் உள்ள டிரெகண்டர் டவர் காம்பிளக்ஸ் 68 - மாடிகளை கொண்டதாகும்.
தனது நண்பரை பார்ப்பதற்காக என்று கூறிவிட்டு இந்த கட்டிடத்திற்கு லுசிடி வந்துள்ளர். கட்டிடத்தின் காவலாளி கேட்டபோது 40-வது மாடியில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக வந்து இருப்பதாக லுசிடி கூறியுள்ளார். ஆனால், கட்டிடத்தின் பாதுகாவலர்கள் விசாரித்த போது, அதில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. அவரை நிறுத்துவதற்காக பாதுகாவலர்கள் முயற்சித்து உள்ளனர்.
ஆனால், அதற்குள் எலவேட்டர் மூலமாக அவர் 68-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது பென்ட்ஹவுஸ் ஒன்றின் ஜன்னல் கதவை லுசிடி தட்டியிருக்கிறார். இதைக் கவனித்த வீட்டு பணிப்பெண் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும், அதற்குள் லுசிடி அதற்குள் கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
லுசிடியின் கேமராவை கைப்பற்றிய போலீசார், அதில் முழுவதும் அவரது சாகசங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று இருந்ததை கண்டெடுத்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வரும் லுசிடி, அங்கு பல உயரமான கட்டிடங்களில் இருந்து சாகசமான முறையில் படங்களை எடுத்து பதிவிட்டு வந்துள்ளார்.
கடந்த 16 ஆம் தேதி பல்கேரியா நாட்டில் உள்ள கப்ரவோ என்ற நகரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் படிக்கட்டில் தொங்கியபடி அவர் புகைப்படம் ஒன்றை எடுத்து இருந்தார். அதன்பிறகு அவர் ஹாங்காங் வந்த இருக்கலாம் என்றும் அப்போதுதான் சாகச முயற்சியின் போது விபரீதம் நிகழ்ந்து இருக்கலாம் என்று அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் தகவலாக உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications