ஐயயோ! டாய்லெட்டை விட ரொம்பவே மோசம்! மொபைலில் மறைந்து கிடக்கும் கிருமிகள்.. தவிர்ப்பது எப்படி
வாஷிங்டன்: மொபைல் நம்மிடம் இருந்து தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ள சூழலில், இது குறித்து சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வு ஒன்றில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இந்த டெக் உலகில் மொபைல் இல்லாமல் வாழ்வதே கடினமான ஒன்றாகிவிட்டது. இப்போது ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்துமே உணவு டெலிவரி முதல் அனைத்துமே இணையம் என்றாகிவிட்டது.
இங்குப் பலருக்கும் கூட மொபைல் இல்லையென்றால் எதோ அன்றைய நாள் ஓடாததைப் போலவே இருக்கும். அந்தளவுக்கு இப்போது நமது வாழ்க்கையின் அங்கமாக மொபைல் மாறிவிட்டது.

மொபைல்
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கையை நாம் கற்பனை செய்து பார்ப்பதே கடினம் என்றாகிவிட்டது. தொலைவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்வது என்பதைத் தாண்டி கடந்த 15 ஆண்டுகளில் நமது மொபைல் தொழில்நுட்பம் அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது. உணவு, பொருட்களை ஆர்டர் செய்வதில் தொடங்கி அனைத்துமே இப்படி டிஜிட்டல் மயமாகிவிட்டது.

பாக்டீரியா
ஆனால் மொபைலில் இருக்கும் நெகடிவ் அம்சங்கள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக்கொண்டுதான் வருகிறது. அப்படியொரு தகவல்கள் தான் இப்போது வெளியாகி உள்ளது. இப்போது உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனில் பாக்டீரியாக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் எப்போதும் நாம் மொபைலை நம் கையோடு தான் எடுத்துச் செல்கிறோம்.

என்ன காரணம்
ஜீன்ஸ் பாக்கெட், டேபிள் தொடங்கி இப்படிப் பல இடங்களில் மொபைலை வைத்து வைத்து எடுக்கிறோம். அப்போது பல நேரங்களில் மிகவும் அழுக்கான இடங்களில் கூட மொபைலை கீழே வைக்கிறோம். இதன் மூலம் எளிதாக நமது மொபைல்களில் பாக்டீரியா பரவுகிறது. வெளியே சென்றுவிட்டுத் திரும்பும் போது நாம் கை, கால்களைக் கழுவுகிறோம். ஆனால், மொபைலை எதுவுமே செய்வதில்லை. இதனால் அதிலுள்ள பாக்டீரியா பெருகத் தொடங்கிவிடுகின்றன.

டாய்லெட்டை விட மோசம்
இப்படி எத்தனை பாக்டீரியாக்கள் அங்கே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் நிச்சயம் ஷாக் ஆகிவிடுவீர்கள். அதாவது டாய்லெட் சீட்டில் இருப்பதைக் காட்டிலும் 10% அதிக பாக்டீரியா நமது மொபைல் போனில் உள்ளதாம். இதே எதோ போற போக்கில் அடித்து விடும் வாட்ஸ் அப் தகவல் இல்லை. இது தொடர்பாக அரிசோனா பல்கலைக்கழகம் விரிவான ஆராய்ச்சி ஒன்றையே நடத்தி உள்ளது.

ஆய்வு
இதில் டீன் ஏஜ் மாணவர்களின் மொபைலில் குறைந்தது 17,000 பாக்டீரியாக்கள் உள்ளன.. இது சாதாரண டாய்லெட் சீட்டில் இருக்கும் பாக்டீரியாவை விட 10 மடங்கு அதிகமாகும். இது உங்களுக்கு ஷாக் தரலாம் ஆனால் இதுதான் உண்மை. இப்போது மொபைலை பயன்படுத்திக் கொண்டே சாப்பிடும் பழக்கம் கிட்டதட்ட அனைவரிடமும் உள்ளது. இதனால் நமது வயிற்றுக்குள் பாக்டீரியாக்கள் செல்லும் வாய்ப்புகளும் மிக அதிகம்.

தவிர்ப்பது எப்படி
பொதுவாகப் பாக்டீரியா அதிகமாக இருக்கும் டாய்லெட்டிற்கு உங்களை போனை எடுத்துச் செல்லக் கூடாது. மொபைல் போனை அதற்கென இருக்கும் சுத்திகரிப்பானைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக நேரடியாக மொபைல் மீது அதை ஸ்ப்ரே செய்யக் கூடாது. கிருமிநாசினியை சிறிய துணியில் அப்ளை செய்து அதைக் கொண்டு மொபைலை துடைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் குறிப்பிட தகுந்த அளவுக்குப் பாக்டீரியாவை மொபைலில் இருந்து தள்ளி வைக்க முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications