நடக்க கூட சிரமம்.. 4 மணி ஆனாலே தலைச்சுற்றல், மயக்கம்.. பைடன் உடல்நிலை ரொம்ப மோசமாம்! பரபர ரிப்போர்ட்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் பைடன், டிரம்ப் போட்டியிடுகிறார்கள். கடந்த வாரம் இருவருக்கும் இடையே நடந்த விவாதத்தில் பைடன் மிக மோசமாகச் சொதப்பிவிட்டார். இதற்கிடையே பைடன் உடல்நிலை மற்றும் மனநிலை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் பைடன் உடல்நிலை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் பைடனால் காலை வேலை மட்டுமே வேலை செய்ய முடிகிறதாம். அதுவும் ஆறு மணி நேரம் மட்டுமே அவரால் வேலை செய்ய முடிகிறதாம்.
பைடன்: 81 வயதான பைடனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நன்றாக வேலை செய்ய முடிவதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 6 மணி நேரத்தைத் தாண்டினால் அவர் அதீதமாகச் சோர்வடைந்து விடுகிறாராம். அதேபோல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போதும் அவர் சோர்வடைந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
சமீபத்தில் தான் அதிபர் தேர்தலையொட்டி பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. அதில் பைடன் செயல்பாடுகள் மிக மோசமாகவே இருந்தது. அவர் அதீத சோர்வுடன் இருந்ததும் அதற்குக் காரணம். இதனாலேயே இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பைடன் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பைடன் உதவியாளர்கள் கூறியுள்ளனர்.
வெள்ளை மாளிகை: வெள்ளை மாளிகையில் வேலை செய்யும் மற்றும் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் பலரும் பைடன் இதுபோல அவ்வப்போது ஃபீரீஸ் ஆகி நின்றுவிடுவார் என்றே கூறுகிறார்கள்.
உளறி கொட்டிய பைடன்.. "பெரிய சொதப்பல்.." ஆனாலும் டிரம்பிற்கு விழாத வாக்குகள்! என்ன காரணம் தெரியுமா
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், பைடனின் உடல்நிலை குறித்து மிகப் பெரியளவில் விவாதம் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்தாண்டு அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் 4 ஆண்டுகள் பதவியில் இருப்பார். அதன்படி பார்த்தால் அவர் 86ஆவது வயது வரை அதிபராக இருப்பார். இப்போதே பைடன் உடல்நிலை மற்றும் மனநலன் இப்போது இப்படி இருக்கும் போது அந்த வயதில் அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதே இப்போது பலரது சந்தேகமாக இருக்கிறது.
சொதப்பல்: கடந்த வாரம் பைடன்- டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. அதில் கடந்த 4 ஆண்டுகளில் பைடன் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி இருக்கலாம். ஆனால், இந்த விவாதத்தில் மிகவும் திணறினார். அவரால் சில வரிகள் கூட கோர்வையாகப் பேச முடியவில்லை. பல இடங்களில் அவர் திக்கித் திணறினார். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டிரம்ப் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தினார். பைடன் அந்த விவாதத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் கூட ஒப்புக் கொண்டனர்.
இதற்கிடையே அந்த விவாதம் அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கு நடந்தது. அதாவது இது பைடன் நல்ல ஆக்டிவாக இருக்கும் நேரத்தில் இருந்து 5 மணி நேரம் கடந்ததாகும். இப்போது பைடன் உடல்நிலை குறித்து அவரது உதவியாளர்களின் கருத்து வெளியாகியுள்ள நிலையில், அதை பைடனின் விவாத ஃபர்பாமன்ஸ் உடன் பலரும் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள்












Click it and Unblock the Notifications