உளறி கொட்டிய பைடன்.. "பெரிய சொதப்பல்.." ஆனாலும் டிரம்பிற்கு விழாத வாக்குகள்! என்ன காரணம் தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், நேற்று பைடன் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பைடன் மொத்தமாகச் சொதப்பினார். டிரம்ப் தான் விவாதம் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். இருந்த போதிலும் விவாதத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில் டிரம்பிற்கு நல்ல செய்தி எதுவும் இல்லை.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகவிட்டது.

இந்த இரு தலைவர்களுக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை விவாதம் ஒன்று நடைபெற்றது. இதற்கிடையே இந்த விவாதத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட முக்கிய சர்வே முடிவு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
சர்வே: இந்த சர்வேயில் விவாதத்தில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது டிரம்ப் தான் என்றே மக்கள் தெரிவித்தனர். பைடன் இந்த விவாதத்தில் பெரியளவில் சொதப்பியதாகவே மக்கள் கருதுகிறார்கள். எல்லாம் சரி, யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்டால்.. அதற்கு மக்கள் வைக்கும் ட்விஸ்ட் பெரியதாகவே இருக்கிறது. இந்த சர்வே குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பைடன் திக்கி திணறுகிறார்.. டிரம்ப் தான் விவாதத்தை ரூல் செய்கிறார்.. உற்று கவனிக்கும் அமெரிக்க மக்கள்
Ipsos poll என்ற அமைப்பு நடத்திய இந்த சர்வேயில் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. முதல் கேள்வி பைடனின் உடல்நிலை பற்றியது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் உடல்நிலை மற்றும் மனநிலை ஃபிட்டாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். பைடன் உடல்நிலை குறித்து இணையத்தில் பல வித தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த கேள்வி முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
உடல்நிலை மோசம்: இதில் பெரும்பாலான வாக்காளர்கள் பைடன் உடல்நிலை மோசமாக இருப்பது போல உணர்வதாகவே தெரிவித்துள்ளனர். விவாதத்திற்கு முன்பு பைடன் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக 27% மக்கள் நினைத்துள்ளனர்.. விவாதத்திற்குப் பிறகு இது 20%ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக அவரது சொந்த கட்சியினரே பலரும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
அடுத்து விவாதத்தில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு டிரம்பிற்கு ஆதரவாகவே பெரும்பாலானோர் கருத்து கூறியுள்ளனர். சுமார் 65% மக்கள் டிரம்ப் தான் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். பைடன் விவாதத்தில் சொதப்பிவிட்டதையே இது காட்டுகிறது.
பெரிய ட்விஸ்ட்: ஆனால், இங்கே ட்விஸ்ட் என்னவென்றால்.. என்ன தான் பைடன் விவாதத்தில் மிக மோசமாகச் செயல்பட்டாலும் கூட பைடனுக்கே ஆதரவு அளிக்க போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். விவாதத்திற்கு முன்பு சுமார் 44% பேர் பைடனுக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தனர். விவாதத்திற்குப் பிறகு இது 46%ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் டிரம்பிற்கு வாக்களிக்கப் போவதாக விவாதத்திற்கு முன்பு அது 44%ஆக இருந்த நிலையில், விவாதத்திற்கு பிறகும் அது 44%ஆகவே தொடர்ந்துள்ளது.
காரணம் என்ன: அதாவது பைடன் விவாதத்தில் சொதப்பி இருக்கிறார் என்பதை மக்கள் ஒப்புக் கொண்டாலும் அவருக்கே வாக்களிக்க உள்ளனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்பின் கொள்கைகள் எல்லாம் அடிப்படைவாத கொள்கைகளாகவே இருக்கிறது. இதனால் பழைமைவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் விரும்பாத மக்கள் அனைவரும் டிரம்பிற்கு எதிராக உள்ளனர். அங்கு டிரம்பிற்கு எதிராக பைடன் மட்டுமே இருக்கிறார். வேறு ஆப்ஷன்கள் எதுவும் இல்லாததாலேயே மக்கள் பைடனுக்கு வாக்களிக்க உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதேநேரம் இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. பைடன் உடல்நிலை குறித்த தகவல்கள் அவருக்கு எதிராகவே திரும்பி வருகிறது. அதிபர் தேர்தல் நடக்க சில மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த முறை தேர்தல் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications