Coronavirus: கொரோனா இருக்கா இல்லையா?.. 20 நிமிடங்களில் கண்டறியலாம்.. விலையும் குறைவாம்!
வாஷிங்டன்: செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை 20 நிமிடங்களில் தெரிந்துக் கொள்ள முடியுமாம்.
உலகளவில் கொரோனாவால் 35.91 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் ஒரே நாளில் 1,23,675 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் 28.45 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
அமெரிக்காவில் 7.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஓமிக்ரானால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கொரோனாவை ஆர்டி பிசிஆர் மூலம் கண்டறியும் முறை பின்பற்றப்படுகிறது.

கொரோனா முதல் அலை
ரேபிட் கிட்டுகள் மூலமும் கொரோனா முதல் அலையின் போது கண்டறியப்பட்டது. ஆனால் அவற்றில் துல்லியத்தன்மை இல்லை என்பதால் இந்த கிட்களை பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆர்டி பிசிஆர் மூலம் கொரோனா பரவலை கண்டறிய பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்குள் பலருக்கு கொரோனா பரவி வருகிறது.

அமெரிக்காவில்
இதனால் மிகவும் விரைந்து, அதே நேரத்தில் விலை குறைந்த ஒரு கொரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க அமெரிக்காவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டறிந்துள்ளார்கள்.

குறைந்த கட்டணம்
ஹார்மனி (Harmony) கொரோனா பரிசோதனை முறை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த முறையில் Sars 2 cov வைரஸின் மரபணுப் பொருள் கண்டறியப்படுகிறது. இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி லூட்ஸ் கூறுகையில், குறைந்த கட்டணத்தில் எங்கும் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு எளிமையானதாக இந்த சோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்பம்
மரபணு இருப்பதை கண்டறிய ஆர்டி பிசிஆர் போன்ற முறையை பயன்படுத்துகிறது. ஸ்மார்ட்போன், டிடெக்டரை இயக்கவும் முடிவை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுகிறது. எனவே இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகிறது.

4 மாதிரிகள்
20 நிமிடங்களில் முடிவை அளிக்கிறது. இதில் பயன்படுத்தக் கூடிய டிடெக்டர் ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் திறன் கொண்டது. இந்த சோதனை முடிவு மிகத் துல்லியமாக உள்ளது என சொல்லப்படுகிறது. போன் மூலம் சோதனை முடிவுகள் கிடைக்கும். இந்த ஹார்மனி கொரோனா பரிசோதனை முறையில் வைரஸ் மரபணுவின் 3 வெவ்வேறு பகுதிகள் கண்டறியப்படுகிறது.
Recommended Video

புரதம்
ஒரு புதிய மாறுபாடு ஒரு பிராந்தியத்தில் பல உருமாற்றங்களை கொண்டிருந்தால் புதிய சோதனை மற்ற இரண்டையும் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதாவது ஸ்பைக் புரதம் என்ற மரபணுவின் முக்கிய பகுதியில் நிறைய உருமாற்றங்களைக் கொண்டுள்ள ஓமிக்ரான் மாறுபட்டை இதன் மூலம் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications