அடேங்கப்பா!! ஒரே லாட்டரி சீட்டுக்கு ரூ.3,200 கோடி பரிசு.. ஓவர் நைட்டில் மில்லியனர் ஆன நபர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ''அதிர்ஷ்டம் ஒருவனுக்கு தாயாக இருக்கும் மற்றவனுக்கு மாற்றாந்தாயாக இருக்கும்'' என்பது பழமொழி. இதை போல அதிர்ஷ்டம் யாரிடத்தில், எப்போது வந்து சேரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

அதிர்ஷ்டம் ஒருவருக்கு வந்து சேர வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது. இந்த நிலையில் அமெரிக்காவில் அதிர்ஷ்டம் ஒருவருக்கு மொத்த கூரையையும் பிய்த்துக் கொண்டு விழுந்துள்ளது.

 ரூ.3200 கோடி பரிசு

ரூ.3200 கோடி பரிசு

ஆமாங்க.. அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லாட்டரி சீட்டுக்கு 426 மில்லியன் டாலர் மதிப்பில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் இந்த தொகை எவ்வளவு தெரியுமா? சொன்னா மயக்கம் போட்டு விழுந்திட மாட்டீங்களே? அதாவது இந்த தொகை நமது இந்தியா ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,200 கோடி ஆகும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உட்லேண்ட் ஹில்ஸ் பிரிவில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்தில்தான் இந்த குறிப்பிட்ட லாட்டரி சீட்டு விற்கப்பட்டுள்ளது.

மெகா அதிர்ஷ்டசாலி யார்?

மெகா அதிர்ஷ்டசாலி யார்?

இந்த லாட்டரி சீட்டின் வெற்றி எண்கள் 3, 16, 25, 44 மற்றும் 55 என்றும் மெகா பந்து 13 என்று கலிபோர்னியா மாநில லாட்டரி தெரிவித்துள்ளது. ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த லாட்டரிச் சீட்டை வாங்கியவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் இந்த பரிசு விழுந்த சீட்டை வாங்கியவர் இந்த மெகா பரிசு தொகையை பெற்றுக் கொள்ள ஒரு ஆண்டு டைம் உள்ளது.

பரிசு தொகை எப்படி வழங்கப்படும்?

பரிசு தொகை எப்படி வழங்கப்படும்?

ஆம்.. லாட்டரி ரிசல்ட் அறிவித்த நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள் இந்த தொகையை அவர் பெற்றுக் கொள்ளலாம் என்று கலிஃபோர்னியா லாட்டரித்துறை தெரிவித்துள்ளது. ரூ.3200 கோடி பரிசுத் தொகையை பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வைத்திருப்பவர் மொத்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது 29 ஆண்டுகளுக்கு தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம் என்று லாட்டரித்துறை கூறியுள்ளது.

 காத்திருக்கும் மக்கள்

காத்திருக்கும் மக்கள்

"கலிபோர்னியாவில் இவ்வளவு பெரிய ஜாக்பாட்டுடன் வெற்றிபெறும் டிக்கெட்டைப் பெறுவது எப்போதுமே உற்சாகமாக இருக்கும்" என்று கலிபோர்னியா மாகாண லாட்டரியின் இயக்குனர் அல்வா வி. ஜான்சன் தெரிவித்தார். பரிசு விழுந்த லாட்டரிக்கு சீட்டு வைத்திருப்பவரை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ரூ.3200 கோடி பரிசு விழுந்த மெகா அதிர்ஷ்டசாலி, பல மில்லியன்களுக்கு அதிபதி ஆன நபர் யார்? என்பதை அறிய ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+