அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் திடீர் மரணம்.. காரணத்தை சொல்ல மறுக்கும் ரஷ்யா.. கிளம்பும் சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ரஷ்யாவிற்கான தூதராக பணியாற்றி வந்த அலெக்சாண்டர் டார்ச்சியேவ் திடீரென்று இறந்துள்ளார். அவரது இறப்பை ரஷ்யாவின் வெளியுறவுத்துறை உறுதி செய்தாலும் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

russia-ambassador-to-the-us-dies-suddenly-in-moscow

ரஷ்யாவின் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் அலெக்சாண்டர் டார்ச்சியேவ். இவர் ரஷ்யாவின் தூதராக கனடாவில் 2014ம் ஆண்டு முதல் 20221ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

பிறகு கடந்த 2025ம் ஆண்டில் அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதராக நியமனம் செய்யப்பட்டார். உக்ரைன் போரால் ரஷ்யா - அமெரிக்க இடையே மோதல் உள்ள சமயத்தில் இவரது நியமனம் நடந்தது.

இந்நிலையில் தான் அலெக்சாண்டர் டார்ச்சியேவ் இன்று திடீரென்று இறந்துள்ளார். அவருக்கு வயது 66. இவரது மரணத்தை ரஷ்யா உறுதி செய்துள்ளது. அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் திடீரென இறந்துவிட்டார் என உறுதி செய்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவரது இறப்பிற்கான காரணம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

பொதுவாக ஒரு நாட்டின் தூதர் இறந்தால் அதற்கான காரணத்தை குறிப்பிட்ட அந்த நாடு தெரிவிக்கும். ஆனால் ரஷ்யா அப்படியான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

ஏனென்றால் ரஷ்யாவை எடுத்து கொண்டால் தனது எதிரிகளை மர்மமான முறையில் கொல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவில், அமெரிக்க தூதராக பணியாற்றிய அலெக்சாண்டர் டர்ச்சியேவ்வின் திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+