"30 நாள் போர் நிறுத்தம்".. அமெரிக்கா - உக்ரைன் டீலை ஏற்பாரா புதின்? டிரம்ப் சொன்ன முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் போரை உடனடியாக 30 நாட்கள் நிறுத்தி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு ரஷ்யா ஓகே சொல்லும்பட்சத்தில் போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வரும். இதனால் உக்ரைன் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய பதில் அளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். உக்ரைன் மீதான போரால் இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு இருந்த நிலையில் அதனை மறந்து டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

donald trump ukraine russia

அதேபோல் அமெரிக்கா - ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சவுதி அரேபியாவில் பேசினர். அதன்பிறகு கடந்த மாதம் 28 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பேசினர். இதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. போர் நிறுத்தம் செய்வதில் இழுபறி ஏற்பட்டது.

உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளும் உளவு தகவல்களையும், ஆயுத உதவிகளையும் டிரம்ப் நிறுத்தினார். அதன்பிறகு விளாடிமிர் ஜெலன்ஸ்கி பணிந்தார். இதையடுத்து நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உக்ரைன் சார்பில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் Chief of Staff பொறுப்பில் உள்ள அன்ட்ரி எர்மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மொத்தம் 7 மணிநேரம் வரை பூட்டிய அறையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் 5 முக்கிய டீல் செய்யப்பட்டன. அதில் ஒன்று தான் 30 நாட்கள் உடனடியாக போர் நிறுத்தம் செய்வது. அதாவது உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். உளவு தகவல்கள் மற்றும் ஆயுத பகிர்வை வழங்க ஒப்புதல் செய்யப்பட்டது. 2வது 30 நாட்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும். ரஷ்யாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

3வது உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகளை ரஷ்யா விடுவிக்க வேண்டும். 4வது போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பா ஒருபகுதியாக இருக்க வேண்டும். 5வது கனிமவள ஒப்புதல் தொடர்பாக ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா - உக்ரைன் இடையே நீண்டகால உறவை பேண வேண்டும். உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்ற 5 முக்கிய விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை என்பது உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்துக்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்வி என்பது எழுந்துள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛உக்ரைன் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இனி நாம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ரஷ்ய அதிபர் (விளாடிமிர் புதின்) போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறோம். நகரங்கள் முழுவதும் குண்டுகள் வீசப்படும்போது ஏராளமான மக்கள் இறந்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும். எனவே போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். இந்த போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் அது பெரிய விஷயமாக இருக்கும்'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+