பயப்படும் ஆலோசகர்கள்! தவறாக வழிநடத்தப்படும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின்! அமெரிக்கா ‛பகீர்’ தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛‛ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார். உக்ரைனில் நிலவும் மோசமான போர் நிலவரம் குறித்து விலாடிமிர் புடினிடம் பேச ஆலோசகர்கள் பயப்படுகின்றனர்'' என அமெரிக்க வெள்ளை மாளிகை கூறுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்கிறது. ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏவுகணை குண்டுவீச்சு நடத்தப்படுகிறது. தற்போது மரியுபோல் நகரில் வான்வளி தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைனில் அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

முடிவுகள் எட்டாத பேச்சுவார்த்தை

முடிவுகள் எட்டாத பேச்சுவார்த்தை

உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த போர் நிறுத்த முடிவை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையிலும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முக்கிய முடிவுகளும் எட்டப்படவில்லை.

பிரிட்டிஷ் உளவுத்துறை

பிரிட்டிஷ் உளவுத்துறை

இந்நிலையில் தான் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் மனச்சோர்வைடைந்துள்ளதாகவும், ஆயுதங்கள், போர் உபகரணங்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் மேலிட கட்டளைகளை நிறைவேற்ற படை வீரர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் பிரிட்டிஷ் உளவுத்துறை தொடர்ந்து கூறி வருகிறது.

 பயத்தில் ஆலோசகர்கள்

பயத்தில் ஆலோசகர்கள்

உக்ரைன் போர் களத்தில் ரஷ்யாவின் நிலை என்ன என்பது பற்றியும் போருக்கு எதிராக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளின் முழுமையான தாக்கம் குறித்தும் விலாடிமிர் புடினுக்கு அவரது ஆலோசகர்கள் எடுத்து கூறவில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இதுபற்றி அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கேட் பெடிங் பீல்ட் விளக்கமளித்துள்ளார்.

Recommended Video

    Russia-வை தண்டிப்பதாக நினைத்து America வைத்துக்கொண்ட ஆப்பு | Oneindia Tamil
    தவறாக வழிநடத்தப்படும் புடின்

    தவறாக வழிநடத்தப்படும் புடின்

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛அதிபர் விலாடிமிர் புடின் ரஷ்ய ராணுவத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார். இதுபற்றிய தகவல் அமெரிக்காவிடம் உள்ளது. மேலும் போர் தொடர்பாக விலாடிமிர் புடினுக்கும் அவரது ராணுவ தலைமைக்கும் இடையே கருத்து மோதல்களை வெடிக்க செய்துள்ளது. விலாடிமிர் புடினின் போர் நடவடிக்கை மிகப்பெரிய தவறாகும். இது ரஷ்யாவை பலவீனப்படுத்துவதோடு, நீண்டகாலமாக உலக அரங்குகளில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளும்'' என தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+