வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி பீட்டரும், மோசசும் கல்யாணம் பண்ணலாம்.. ஓரின திருமணத்திற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு.. கியூபாவில்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கியூபாவில் தன் பாலின திருமணத்தை சட்டமாக்குவது தொடர்பாக தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலான மக்கள் தன் பாலின திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், அங்கு ஒரே பாலின திருமணம் சட்டமாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் கம்யூனிச ஆட்சி நடைபெற்று வருகிறது.

கியூபாவில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் சாசனத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையாக தன்பாலின சேர்க்கைக்கு ஒப்புதல் கோரி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

66.9 சதவீதம் பேர் ஆதரவு

66.9 சதவீதம் பேர் ஆதரவு

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்குகள் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் கியூபாவில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாகியுள்ளது. குடும்ப சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஆதரவாக 66.9 சதவீத வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்து 33 சதவீத வாக்குகள் பதிவாகின.

 குழந்தைகளை தத்தெடுக்கலாம்

குழந்தைகளை தத்தெடுக்கலாம்

லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அர்ஜெண்டினா, பிரேசில், சிலி, கொலிம்பியா உள்ளிட்ட நாடுகள் தற்போது தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கின்றன. கியூபாவில் தற்போது தன்பாலின திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதன் மூலம் தன்பாலின சேர்க்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.

மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு

மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு

கியூபாவில் தன்பாலின திருமண சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கக்கூடாது என்று 2019 ஆம் ஆண்டு முதலே மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இதையும் மீறி தற்போது நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை வரவேற்று கியூபாவில் உள்ள தன்பாலினசேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

பொது வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து கியூபா அதிபர் கூறியிருப்பதாவது:-''நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. குடும்ப சட்டங்களை அங்கீகரிப்பது நீதியை செய்வதாக இருக்கும். பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இந்த சட்டம் வந்திருக்கிறது. இன்று முதல் கியூபா மேலும் சிறந்த நாடாகும் '' என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Cuba held an election to legalize same-sex marriage. Same-sex marriage has been legalized since the majority of people voted in favor of same-sex marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X