மவுசு குறையும் தங்கம்.. இனி பழைய மாதிரி மின்னாது! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய பொருள்!
வாஷிங்டன்: தங்கம் ஏன் இவ்வளவு காஸ்ட்லியாக இருக்கிறது? ஏனெனில் அது எளிதில் மற்ற தனிமங்களுடன் வினைபுரியாது. அதாவது இரும்பு செம்பு போல.. துருப்பிடிக்காது, நிறம் மங்காது. எனவேதான நகைகள் செய்ய தங்கம் பயன்படுத்தபடுகிறது. தங்கம் அளவில் குறைவாகவே கிடைப்பதால் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், தங்கம் இப்படி எந்த தனிமத்தாலும் வினைபுரியாத பொருள் கிடையாது. அது நிச்சயம் வினைபுரியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
அதாவது தங்கம் எத்தனை ஆண்டுகளானாலும் அது தனது மின்னும் தன்மையை இழக்காது. பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட, கடலுக்கு அடியில் பல கி.மீ ஆழத்தில், அழுத்தம் அதிகமாக உள்ள இடத்தில் இருந்தாலும் கூட, தங்கம் மின்னிக்கொண்டதான் இருக்கும். காரணம் அது எந்த தனிமத்தாலும் வினைபுரியாது.

இப்படி இருக்கையில் கலிஃபோர்னியாவில் உள்ள SLAC எனும் ஆய்வகத்தில், விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தங்கம் வினைபுரியும் பொருளை கண்டுபிடித்திருக்கின்றனர். முங்கே ஃப்ரோஸ்ட் என்கிற விஞ்ஞானி தலைமையிலான ஆய்வாளர்கள், ஹைட்ரஜனுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் என்ன ஆகும் என்பதை ஆய்வு செய்தனர். இது போன்ற ஆய்வுகளில் தங்கம் பயன்படுத்தப்படும். தங்கம் எந்த பொருளுடனும் எளிதில் சேராது என்பதால், ஆய்வில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆய்வில் ஒரு பாக்ஸில் ஹைட்ரஜன் வாயுவை அடைத்து, அதை தங்கம் கொண்டு சீல் செய்தனர். ஹைட்ரஜனுக்கு அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், தங்கம் இந்த வாயுவுடன் கலந்து, 'தங்க ஹைட்ரைடு' எனும் புதிய திடப்பொருள் உருவானது. இது விபத்தாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தங்கம் ஹைட்ரஜனுடன் வினைபுரியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இப்படி ஒரு திடப்பொருள் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இதை வைத்து என்ன செய்ய முடியும் என்பது போகப்போகத்தான் தெரியும். வியாழன் மற்றும் சனி கிரகங்களில் அழுத்தம் அதிகம் இருக்கும். அங்கு தங்கமும் இருக்கிறது. இப்போது ஆய்வகங்களில் தங்க ஹைட்ரைடு கண்டுபிடிக்கப்பட்டதை போல, அங்கும் இதுபோன்று தங்க ஹைட்ரைடு இருக்கும். இதை வைத்து கோள்களின் உருவாக்கம் குறித்து இன்னும் அதிகமாக நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும்.
அதேபோல துருப்பிடிக்காத மின்னணு மற்றும் மருத்துவ பொருட்களை தயாரிக்க இந்த திடப்பொருள் பயன்படுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இனி தங்கம் பழையபடி எப்போதும் மின்னும் பொருளாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications