பெண்களுக்குதான் ஆயுசு அதிகம்! அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.. காரணம் இதுதான்!
வாஷிங்டன்: வழக்கமாக ஆண்களை விட பெண்கள்தான் அதிக ஆண்டுகள் வாழ்கின்றனர். இதை விஷயத்தை மேம்போக்காக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது உண்மையான விஷயம்தான். இதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மருத்துவம், வாழ்க்கை முறை மாற்றங்கள், உலகப் போர்கள் எனப் பல சவால்களையும் தாண்டி இந்த ஆயுள் இடைவெளி நீடிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, பெண்கள் ஆண்களை விட சராசரியாக 5.4 ஆண்டுகள் நீண்ட காலம் வாழ்கின்றனர். 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான புதிய ஆய்வில், இதற்கான காரணம் விளக்கப்பட்டிருக்கிறது.

தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் ஜோஹன்னா ஸ்டார்க் தலைமையில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. காடுகளில் மற்றும் வளர்ப்புச் சூழல்களில் வாழும் 1,176 பாலூட்டி மற்றும் பறவை இனங்களின் ஆயுட்காலத்தை ஆராய்ந்து, ஆயுள் வேறுபாடு மனிதர்களுக்கு மட்டுமானதா? அல்லது எல்லா உயிர்களுக்குமானதா? என்பதை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆய்வின் முடிவில், எல்லா உயிர்களிலும் பெண் உயிர்கள்தான் அதிக காலம் வாழ்கின்றன. பாலூட்டிகளில் பெண் உயிரினங்கள் ஆண் உயிரினங்களை விட 12-13% நீண்ட காலம் வாழ்ந்தன. இதற்கு காரணம் செக்ஸ் குரோமோசோம்களின் அமைப்பே. பாலூட்டிகளில், பெண் உயிரினங்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் இருப்பதால் மரபணு பேக்அப் செய்யப்படுகிறது. ஆண் உயிரினங்களுக்கு இந்த பேக்அப் வசதி இல்லாததால், மரபணு குறைபாடுகளுக்கும் வயது தொடர்பான பாதிப்புகளுக்கும் எளிதில் ஆளாகின்றன.
இன்றைய சூழலில், பெண்களும் ஆண்களும் சமம் என்று சொல்லப்பட்டாலும், போர் களத்தில் ஆண்களே அதிக அளவில் இருக்கின்றனர். ஆதி காலத்தில் இணை சேர்வதற்கு ஆண்கள் சண்டையிட்டனர். இதெல்லாம் ஆண்கள் மரணிப்பதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், இந்த சுற்றுச்சூழல் அழுத்தங்களை நீக்கினாலும், அதாவது ஆண்கள் போருக்கே போகவில்லை என்றாலும் கூட, அவர்கள் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
அடுத்த தலைமுறையை உருவாக்க பெண்களுக்கு நீண்ட ஆயுள் இயற்கையாகவே வளர்ந்திருக்கிறது. பிரசவ காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா பாலூட்டிகளிலும், பெண் விலங்கு கருத்தரிக்க தொடங்கியதிலிருந்து, பிரசவிக்கும் வரை, வயிற்றில் இருக்கும் அந்த உயிர், தாயைதான் நம்பியிருக்கிறது. தந்தை விலங்கு உணவு கொண்டு வந்து தரும், என்று நம்பியிருக்கவில்லை. எனவே தாய், உயிர் வாழும் காலம் அதிகரித்திருக்கிறது.
அதேபோல சில பாலூட்டிகள் மற்ற குட்டிகளையும் சேர்த்து வளர்க்கும். அதாவது, யானை குடும்பங்களில், தாய் யானை இல்லாத குட்டிகளை மற்ற தாய் யானைகள் வளர்க்கும். எனவே இயல்பாகவே பெண் விலங்குகளுக்கு நீண்ட ஆயுள் தேவைப்படுகிறது. மாறாக வெட்டியாக சுற்றும் ஆண்களுக்கு எதுக்கு கூடுதல் ஆயுள்? என, இயற்கை ஆண் விலங்குகளுக்கு ஆயுளை குறைத்திருக்கிறது. இது மனிதர்களுக்கும் பொருந்தும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications