கோவிட் போலவே.. வேகமாக பரவும் மர்ம வைரஸ்! இன்னொரு பேரழிவுக்கு தயாராகிறதா உலகம்? விஞ்ஞானிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கோவிட் தொற்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஓரிரு ஆண்டுகளாகத்தான் இந்த தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கோவிட் போலவே, சிகிச்சையே இல்லாத, மர்மமான தொற்று ஒன்று வேகமாக பரவி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இயங்கி வரும், ஜெஃபர்சன் ஹெல்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் விஞ்ஞானிகள் இந்த அதிர்ச்சி செய்தியை தெரிவித்திருக்கிறார்கள்.

WHO virus global

ஜெஃபர்சன் ஹெல்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மருத்துவ இயக்குநர் எரிக் சச்சின்வல்லா, 'அடினோவைரஸ்' எனப்படும் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார். இது காய்ச்சல் அல்லது கோவிட் போன்ற அறிகுறிகளை போல இருந்தாலும், இவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகள் குறைவாகவே உள்ளன என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "பெரும்பாலான சமயங்களில் அடினோவைரஸ் பாதிப்பு லேசானது, ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாகலாம். காய்ச்சல் அல்லது கோவிடை விட இந்த வைரஸ் மிகவும் வலுவானது. இது மற்ற வைரஸ்களை விட உறுதியானது என்பதால் எளிதில் பரவும். சோப்பு, தண்ணீர் அல்லது சாதாரண கிருமிநாசினிகள் இதை அழிக்காது. எனவே இது சுற்றுச்சூழலில் நீண்ட காலம் வாழும்.

மூச்சுத் திணறல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி போன்றவை அடினோவைரஸின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் பாதித்தால் வயிற்றுப்போக்கு அல்லது கண் சிவத்தல் போன்றவையும் ஏற்படலாம். இந்த வைரஸில் அறுபதுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதால், அறிகுறிகள் மாறுபடக்கூடும்.

அடினோவைரஸ் பாதித்தவர்கள், ஓய்வெடுத்தால் இதிலிருந்து மீண்டு விடலாம். இருப்பினும், முதியோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

காய்ச்சல் 40 டிகிரி செல்சியஸ் அடைந்தால் அது தீவிரமான நிலை. இந்த சமயத்தில் மருத்துவரை அணுக வேண்டும். வழக்கமாக, அறிகுறிகள் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு குறையத் தொடங்கும். ஆனால், மூன்று நாட்களுக்கும் மேலாக இது சரியாகமல் இருந்தார், அது ரொம்பவே டேஞ்சரான விஷயம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியா உட்பட ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருந்தன. இதற்கு பெரிய அளவில் சிகிச்சை இல்லை என்பதால், இது கோவிட் தொற்றை போல தீவிரமாக பரவினால் உலகம் இன்னொரு பேரழிவுக்கு உள்ளாகும்" என்றும் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+