மருத்துவமனையில் 62 நாட்கள்.. 181 பக்கங்களில் "பில்"..கொரோனாவிலிருந்து மீண்ட முதியவருக்கு பேரதிர்ச்சி
வாஷிங்டன்: கொரோனாவிலிருந்து அமெரிக்கர் ஒருவர் மீண்ட நிலையில் அந்த மருத்துவமனை தந்த மருத்துவ பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் நடந்தது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் தேதி கொரோனா அறிகுறி இருந்ததால் மைக்கேல் புளோர் (70) என்ற முதியவர் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கைவிரித்த மருத்துவமனை
தொடர்ந்து 2 மாதங்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு சிகிச்சையின் இடையே ஒரு கட்டத்தில் நிலைமை மோசமடைந்தது. உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

பிள்ளைகள்
இதையடுத்து அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பேசுமாறு போன் போட்டு செவிலியர்கள் கொடுத்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துவிட்டார். பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மே 5-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ கட்டணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம்
அதில் 181 பக்கங்கள் கொண்ட மருத்துவ பில்லை பார்த்த புளோர் அதிர்ச்சி அடைந்தார். அதில் இரு மாதங்களுக்கு கட்டணமாக 1.1 மில்லியன் டாலர் போடப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் 8.1 கோடியாகும். முதியோருக்கான அரசு காப்பீட்டு திட்டம் இருக்கும் நிலையில் புளோர் தனது பணத்தை செலவு செய்ய வேண்டிய தேவை இல்லாமல் போனது.

பணம்
இந்த நிலையில் இந்த பெரிய தொகையை எப்படி செலுத்துவது என அவரது குடும்பத்தினர் யோசனையில் உள்ளனர். அவரது இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகியன இயங்காமல் போனதால் அவர் இறக்கும் நிலைக்கு சென்றார். அப்போது கூட அவரது மருத்துவ பில் 20 பக்கங்கள் மட்டுமே கொண்டது. பணமும் 1 லட்சம் டாலராக இருந்தது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications