"ஜெய் ஸ்ரீ ராம்" பிரபல பாப் பாடகியிடம் இந்தியர் செய்த செயல்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு
வாஷிங்டன்: பிரபல பாப் பாடகரான செலினா கோமஸை இந்தியர் ஒருவர் சமீபத்தில் சந்தித்துள்ளார். அவருடன் வீடியோ எடுத்த அந்த நபர் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிடச் சொல்லி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் இரு வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நாடு என்று இல்லாமல் பரவலாக பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் சென்று செட்டிலாகியுள்ளனர்.

இந்தியர்கள்: அதேபோல இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. அப்படி வெளிநாடுகளில் செல்லும் இந்தியர்கள் அங்குள்ள பிரபலங்களுடன் போட்டோ, வீடியோ எடுத்துப் பதிவிடுகிறார்கள். அப்போது நடக்கும் சில சம்பவங்கள் இணையத்தில் டிரெண்டாவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
செலினா: அதாவது பாப் இசை உலகில் முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர் செலினா கோமஸ். சமீபத்தில் இந்தியர் ஒருவர் செலினா கோமஸை சந்தித்துள்ளார். செலினா கோமஸிடம் செல்பி கேட்க அவரும் ஓகே சொல்லி இருக்கிறார். செலினா கோமஸுடன் அந்த நபர் செல்பி வீடியோ எடுக்கவே அப்போது அந்த இந்தியர், "தயவு செய்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுங்கள்" என்று சொல்கிறார்.
இருப்பினும், இது புரியாமல் செலினா கோமஸ் ஷாக் ஆகிறார். அப்போது அந்த நபர், "இந்தியாவின் பெஸ்ட் முழக்கம் ஜெய் ஸ்ரீ ராம்.. அதைச் சொல்லுங்களேன்" என மீண்டும் வற்புறுத்துகிறார். இருப்பினும், செலினா கோம்ஸ் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிடவில்லை.. நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
ஜெய் ஸ்ரீ ராம்: இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் பல்லவ் பாலிவால் என்பவர் பகிர்ந்துள்ளார். "நமது பாலோயர்ஸ்களில் ஒருவர் செலினா கோம்ஸை சந்தித்தார். தீபாவளியை முன்னிட்டு அவர் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறினார்" என்று சொல்லிப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், அந்த வீடியோவை பார்க்கும் போது செலினா கோம்ஸ் எந்த இடத்திலும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதைக் குறிப்பிட்டு பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அதேபோல இந்த வீடியோ தீபாவளியன்று எடுக்கப்பட்டதாகச் சொல்லி அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். ஆனால், செலினா கோம்ஸ் அணிந்திருந்த இந்த உடையைக் கடந்த 2024 மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்து இருந்ததாகவும் எனவே அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
நெட்டிசன்கள்: இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் இரு வேறு விதமான கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். ஒரு சிலர் இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் தனக்குப் பிடித்த, தான் நம்பும் ஒரு விஷயத்தை கேட்கிறார். அதைச் சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் செலினாவின் இஷ்டம் எனச் சொல்லி வருகிறார்கள்.
அதேநேரம் பெரும்பாலானோர் அந்த நபரின் செயலை கண்டித்தே கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். பிரபலத்தைச் சந்திக்கும் போது, அதிலும் இந்தியாவுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாத போது இதுபோல கேட்பது சரியானது இல்லை என்றும் இது தேவையற்ற செயலும் கூட என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications