விண்வெளி ஆய்வில் ட்விஸ்ட்! பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறி? விஞ்ஞானிகள் ஆச்சரியம்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ரோவர் கருவிகள் அவற்றை கண்டறிந்து இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் இந்த பூமி எப்படி உருவானது? பூமியை போல உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் வேறு ஏதேனும் கோள்களில் இருக்கிறதா? என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பூமியின் ஒரே துணைக்கோளான நிலவு குறித்த ஆராய்ச்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சூரிய மண்டலத்தில் உள்ள பிற கோள்களிலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருக்கிறதா என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள். செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் பூமியை போன்றே காணப்படுவதால் இந்த கிரகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். குறிப்பாக சூரியக் குடும்பத்தில் 4-வதாக உள்ள செவ்வாய் கிரகத்தில் எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் உள்ளிட்டவை இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
அதிநவீன கேமராக்கள் மூலம்: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. ஒரு கார் அளவு கொண்ட இந்த ரோவர் கருவி 6 சக்கரங்களை கொண்டதாகும். செவ்வாயின் மேற்பரப்பில் உருண்டோடி பல்வேறு ஆய்வுகளை இந்தக் கருவி மேற்கொண்டு வருகிறது. பெர்சி என்று பெயரிடப்பட்ட இந்த ரோவர் கருவி கடந்த 2021 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பெர்சி ரோவரில் உள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தென்படுபம் பாறைகள், மணல் பரப்புகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ரோவர் கருவிகள் அவற்றை கண்டறிந்து இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 அடி ஆழத்தில் என்ன இருக்கிறது: அதாவது, செவ்வாய் கிரகத்தில் வறண்ட ஏரியின் வண்டல் மண் பரப்புகள் இருப்பது ரோவர் அனுப்பிய தரவுகளில் தெரியவந்து இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:- செவ்வாய்கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட இடத்தில் தற்போது ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருவது ரேடார் இமேஜ்கள் மூலம் தெரியவந்துள்ளது. சுற்று வட்டப்பாதையில் இருந்து மொத்தமாக பல்வேறு விஷயங்களை பார்க்கலாம்.
ஆனால், நாம் பார்ப்பது அதன் அசல் நிலையா அல்லது நீண்டகால மாற்றத்தின் விளைவா? என்பதை நாம் உறுதியாக கூற முடியாது என்று கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டேவிட் பெய்ஜ் கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் பெரிஸ் ரோவரானது, மேற்பரப்பில் இருந்து 10 அடி ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதையும் கண்டறியும் திறன் கொண்டது.
பனிக்கட்டியாக இருக்கிறதா?: அதாவது செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து 10 அடி ஆழத்தில் நீர் உள்ளதா அது உறைந்து பனிக்கட்டியாக இருக்கிறதா உப்புத்தன்மையுடன் இருக்கிறதா ? என்பதையும் கூட கண்டுபிடித்துவிடும் என்று நாசா விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பெர்சி ரோவர் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்கு எட்ஜ் பகுதியில் உள்ள ஜெசேரோ பள்ளத்தாக்கில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பெர்சி ரோவரை பொறுத்தவரை இது பாறைகள், தூசுகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications