பூமியை நோக்கி வரும் விண்கல்! இன்று இரவே மோத வாய்ப்பு.. எந்த பகுதியில் தெரியுமா? விஞ்ஞானிகள் ஷாக்
வாஷிங்டன்: புவி வட்டப்பாதைக்குள் விண்கல் ஒன்று வந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 70 செ.மீட்டர் கொண்ட இந்த விண்கல் செர்பியா அருகே இன்று இரவு 9.45 மணியளவில் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து பார்க்கும் போது இந்த விண்கல் பிளாஷ் லைட் போல கண்ணுக்கு புலப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பூமியை நோக்கி இன்று விண்கல் ஒன்று வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிறுகோள்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சூரிய மண்டலத்தில் சுற்றி வருகின்றன. கணக்கில் எண்ண முடியாத அளவு சுற்றி வரும் இந்த விண்கற்கள் அவ்வப்போது, புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதுண்டு.

பெரும்பாலும் இவை வளிமண்டலத்திலே அழிந்து போகின்றன. பூமி எப்படி சூரியனை சுற்றி வருகிறதோ அதே போல, விண்கற்களும் சுற்றி வருகின்றன. சிறிய விண்கல் முதல் 500 கிலோ மீட்டர் பரப்பளவுக்கும் மேல் அளவு கொண்ட ராட்சத பாறைகளால் ஆன விண்கற்களும் இவற்றில் அடங்கும். இந்த விண்கற்கள் பூமியின் மீது மோதினால் பெரும் பேரழிவு ஏற்படும் என்பதால் விஞ்ஞானிகள் இந்த சிறுகோள்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த சிறுகோள்கள் அரிதாக சில நேரம் பூமி மீது மோதுவதுண்டு. அந்த வகையில் தான் தற்போது, ஒரு விண்கல் புவி வட்டப்பாதைக்குள் விண்கல் ஒன்று வந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த விண்கல் செர்பியா அருகே வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 70 செ.மீட்டர் கொண்ட இந்த விண்கல் இன்று இரவு 9.45 மணியளவில் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது.
இந்த விண்கல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், ஒரு தீப்பந்து போல பெரும்பாலும் காட்சியளித்துவிட்டு சென்றுவிடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த விண்கல் பூமியில் இருந்து பார்க்கும் போது பிளாஷ் லைட் போல கண்ணுக்கு புலப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பூமியில் விழலாம் அல்லது வானிலேயே அழிந்து போகலாம் எனவும் இதில் அச்சப்பட எதுவும் இல்லை எனவும் வானியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications