செவ்வாய் கிரகத்தில் சிட்டி.. 30 வருடத்தில் மனிதர்கள் இருப்பாங்க.. உறுதியாக சொல்லும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் நகர கட்டமைப்புடன் மனிதன் வாழ தொடங்குவான் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
உலக பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமாக இருப்பவர் எலான் மஸ்க். விண்வெளி திட்டத்திலும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்புவது.. செவ்வாய் குறித்த ஆராய்ச்சி என எலான் மஸ்க் நிறுவனம் விண்வெளி ஆய்வில் வேகமாக செயல்பட்டு வருகிறது.

சூரிய குடும்பத்தில் பூமியை தாண்டி வேறொரு கோளில் மனிதன் வாழ முடியும் சூழலை செவ்வாய் கிரகம் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இதனால், அங்கு மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட விண்வெளி துறையில் முன்னணி வகிக்கும் நாடுகள் ஈடுபட்டுள்ளன.
மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்தும் எலான் மஸ்க் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் தான் எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் எலான் மஸ்கிடம், செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்க இன்னும் சில ஆண்டுகளே நமக்கு உள்ளது என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதிலில், "10 ஆண்டுகளுக்குள் மக்கள் செவ்வாய் கிரகத்தில் கால் பதிப்பார்கள். 20 ஆண்டுகளில் அங்கு ஒரு நகரம் அமைக்கப்படலாம்.. ஆனால், 30 ஆண்டுகளுக்குள் நிச்சயமாக குடியேற்றம் அமையும்" என்று பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் ஊறுகையில், ஏஐ , விஆர் தொழில் நுட்படத்திற்கு இடையெ தற்போது செவ்வாய்... என் வாழ்நாளில் இதில் எதுவுமே நடக்கும் என நான் எண்ணியது இல்லை.. இது கொஞ்சம் வியப்பானதுதான் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "எனது அடுத்த வாழ்க்கையில் இந்த மாற்றங்களை நான் பார்க்க இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், எலான் மஸ்க் தனது விண்வெளியில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்த திட்டத்தை பகிர்ந்து இருந்தார். 10 லட்சம் பேரை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்புவேன் என்று கூறியிருந்தார். எனினும், எந்த ஒரு காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை. அதேபோல், மானுடர்களுக்கு நிலவில் தளம் இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும். மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே இருக்க வேண்டும் என்றும் எலன் மஸ்க் கூறியிருந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications