விண்வெளிக்கு போயிட்டு திரும்பிய ஸ்டார்ஷிப்.. ராட்சத கைகளால் பிடித்த ஸ்பேஸ்எக்ஸ்! வரலாற்று சாதனை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தை, அதன் ஏவுதளத்தில் உள்ள பிரம்மாண்ட இயந்திர கைகள் வெற்றிகரமாக பிடித்து நிறுத்தியுள்ளன. எலான் மஸ்கின் நிறுவனம் செய்துள்ள இந்த விஷயம் சர்வதேச அளவில் விண்வெளி துறையில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

உலகின் மிக பெரிய தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேக்ஸ்எக்க்ஸ் விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கிடையே எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பூமிக்கு திரும்பிய ஸ்டார்ஷிப்பை வெற்றிகரமாக பிடித்து நிறுத்தியுள்ளது.

SpaceX Rocket NASA

ஸ்பேஸ்எக்ஸ்

இன்று நவம்பர் 15ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்தது. அதாவது இன்று அதிகாலை டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஏவுதளத்தில் உள்ள இயந்திர கைகள் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பிய ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக பிடித்து நிறுத்தியுள்ளன. உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டை முழுமையாக மீண்டும் பயன்படுத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முயற்சியில் இது முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பிய ஸ்டார்ஷிப்பின் அப்பர் ஸ்டேஜ் ராக்கெட்டை, ஏவுதளத்திலேயே இயந்திர கைகளால் பிடித்து நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. பல ஆண்டுகளாக ஸ்பேஸ்எக்ஸ் இந்த தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து வந்த நிலையில், இப்போது அது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ஷிப்

ஸ்டார்ஷிப்பின் 15வது ஒருங்கிணைந்த சோதனை பயணமான இந்த பிளைட் 15, கடந்த நவம்பர் 14ம் தேதி தெற்கு டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து தொடங்கியது. இந்த பயணத்தில் ஷிப் 42 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 275 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள லோயர் எர்த் ஆர்பிட் பாதையை அடைந்தது.

விண்வெளியில் 22 மணி நேரத்துக்கும் மேலாக பயணித்த அந்த விண்கலம், பூமியை சுமார் 14 முறை சுற்றி வந்தது. இந்த பயணத்தின்போது அடுத்த தலைமுறை ஸ்டார்லிங்க் V3 சாட்டிலைட்கள் 26ஐ விண்வெளியில் நிலைநிறுத்தியது. அவற்றில் மூன்று சாட்டிலைட்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் விண்கலத்தின் வெப்ப கவசம் உள்ளிட்ட பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

என்ன நடந்தது

பயணத்தின் இறுதியில் விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கான பாதையை மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த விண்கலம் வளிமண்டலத்துக்குள் நுழைந்தது. பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தரையிறங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. அது மெல்ல ஸ்டார்பேஸ் ஏவுதளத்தை நோக்கி வந்தது. இன்று நவம்பர் 15ம் தேதி அதிகாலை இந்திய நேரப்படி சுமார் 2.52 மணிக்கு, ஏவுதள கோபுரத்தில் இருந்த இரண்டு பிரம்மாண்ட இயந்திர கைகள் விண்கலத்தை வெற்றிகரமாக பிடித்தன. 'சாப்ஸ்டிக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த கைகள், விண்கலத்தை ஏவுதளத்துக்கு மேலே பாதுகாப்பாக நிறுத்தின.

செலவு குறையும்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ராக்கெட்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும்போது, அது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. இதனால் ஒரு முறை ராக்கெட் அனுப்ப ஆகும் செலவு உச்சத்தில் இருந்தது. ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தான் இதை மாற்றி அமைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே ராக்கெட்டின் கீழ்ப்பகுதியான சூப்பர் ஹெவி பூஸ்டர்களை ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தன. இதன் மூலம் ஸ்டார்ஷிப்பின் கீழ்ப்பகுதியான சூப்பர் ஹெவி பூஸ்டர்களை மீட்டு மீண்டும் பயன்படுத்தியது. ஆனால், விண்வெளிக்கு சென்ற மேல் பகுதியை ஏவுதளத்திலேயே பிடித்து மீட்பது இதுவே முதல்முறை.

கடைசி நிமிடத்தில் நடந்த மாற்றம்

இந்த சோதனையில் இரண்டு பகுதிகளையும் ஏவுதளத்தில் மீட்பதே இலக்காக இருந்தது. ஆனால் சில காரணங்களால் சூப்பர் ஹெவி பூஸ்டரை இயந்திர கைகளால் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக மெக்சிகோ வளைகுடா பகுதியில் கடலில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அது மீட்கப்பட்டது. அதேநேரம் ஸ்டார்ஷிப்பின் அப்பர் ஸ்டேஜ் திட்டமிட்டபடி இயந்திர கைகள் மூலம் மீட்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அது இப்போது வெற்றிகரமாகவும் முடிந்துள்ளது.

இது விண்வெளி துறையில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என தெரிகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ராக்கெட்டின் இரண்டு பகுதிகளையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இது செலவை குறைக்கவும், நிலவு மற்றும் செவ்வாய் கிரக பயண முயற்சிகளை முன்னெடுக்கவும் உதவும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+