"கமலா ஹாரிஸ் வெல்லணும்.." அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக மதுரையில் நடந்த சிறப்பு பிரார்த்தனை! அடடே செம
வாஷிங்டன்: அமெரிக்காவில் நாளைய தினம் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்குக் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் களத்தில் இருக்கும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதற்கிடையே அவர் வெல்ல வேண்டும் என்பதற்காக மதுரையில் சிறப்புப் பிரார்த்தனை நடந்துள்ளது.
அமெரிக்காவில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அங்குக் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

மறுபுறம் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இரு தரப்பிற்கும் இடையே போட்டி மிகக் கடுமையாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மிகத் தீவிரமான பிரச்சாரம் நடந்து வந்தது.
கமலா ஹாரிஸ்: இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். குறிப்பாக அவரது தாயார் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் தான். இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று மதுரையில் சிறப்புப் பிரார்த்தனை நடந்துள்ளது. அங்குள்ள அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் இந்த சிறப்புப் பிரார்த்தனை நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை செவ்வாய்க்கிழமை நடக்கும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் வெல்ல வேண்டும் என இந்த சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள அனுஷ்யத்தின் அனுகிரகம் சார்பில் இந்த சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
நெருங்கிய தொடர்பு: கமலா ஹாரிஸுக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.. கமலா ஹாரிஸ் என்ன தான் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்து இருந்தாலும் அவரது தாய் ஷியாமளா கோபாலன் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். தனது கல்லூரி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற போது ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் டொனால்ட் ஜே ஹாரிஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்குப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.
மேலும், கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி. கோபாலன் மற்றும் ராஜம் கோபாலன் தம்பதியினர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் என்ற பகுதியில் வாழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில் தான் 85 ஆண்டுகளுக்கு முன்பு கமலா ஹாரிஸின் அம்மா ஷியாமளா கோபாலன் பிறந்து இருக்கிறார். என்ன தான் இந்த கிராமத்திற்குக் கமலா ஹாரிஸ் வந்தது இல்லை என்றாலும் இந்த கிராம மக்களும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்: கமலா ஹாரிஸ் சிறு வயதில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். சிறு வயதில் சென்னைக்கு வந்ததாகவும் தனது தாத்தா- பாட்டியுடன் சில நாட்கள் தங்கியதாகவும் அவரே கடந்த 2020 தேர்தல் சமயத்தில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், சென்னை கடற்கரையில் தனது தாத்தா கையை பிடித்து நடந்த நினைவுகளையும் கூட பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெல்லும்பட்சத்தில் அமெரிக்காவில் அதிபராகும் முதல் பெண் என்ற சாதனையை அவர் படைப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications